லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் வெளியாகவுள்ள முதல் திரைப்படத்தின் பஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத இயக்குனராக விளங்கும் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ‘ஜி ஸ்குவாட்’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.
அவரின் நெருக்கமான நண்பர்கள் மற்றும் உதவி இயக்குனர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் முதல் சில தயாரிப்புகள் அமையும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் முதல் படத்தின் பஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்துக்கு ‘பைட் கிளப்’ (Fight Club) என்று பெயரிடப்பட்டுள்ளது.
அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கும் இந்த படத்தில் ‘உறியடி’ விஜய்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.
இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘பைட் கிளப்’ திரைப்படம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.