25 ஆண்டுகளாக திறக்கப்படாத ஹோட்டல் - எங்கே உள்ளது!
Sep 12, 2026, 02:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

25 ஆண்டுகளாக திறக்கப்படாத ஹோட்டல் – எங்கே உள்ளது!

Murugesan M by Murugesan M
Nov 30, 2023, 03:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வடகொரியாவில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஹோட்டல் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.

16,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவழிக்கப்பட்ட ஹோட்டல் ஒன்று 25 ஆண்டுகளுக்கு மேலாகியும் திறக்கப்படவில்லை என்பதுதான் ஆச்சரியமான விஷயம்.

இன்றுவரை அந்த ஹோட்டலுக்கு ஒரு விருந்தினர் கூட வரவில்லை. இப்போது அந்த ஹோட்டல் விளம்பரத்துக்காக மாபெரும் தொலைக்காட்சித் திரையாகப் பயன்படுத்தப்படுகிறது. அதன் பெயர் Ryugyong Hotel.

வடகொரியாவின் தலைநகரான Pyongyang – யில் Ryugyong ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டல் வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங்-உன்னின் ஆடம்பரமான வீட்டில் இருந்து சுமார் 12 மைல் தொலைவில் உள்ளது. இந்த வானளாவிய கட்டிடத்தின் உயரம் 1082 அடியாகும்.

இதில் 3000 அறைகள் கட்டும் திட்டம் இருந்தது. இது பொருளாதார மற்றும் அரசியல் சக்தியின் அடையாளமாக இருந்திருக்க வேண்டும், ஆனால் 25 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ளது. இப்போது அதற்கு ‘ஹோட்டல் ஆஃப் டூம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த ஹோட்டலின் கட்டுமானம் 1987 யில் தொடங்கியது. பிறகு 2 வருடங்கள் கழித்து திறக்க திட்டமிடப்பட்டிருந்தது. சரியான நேரத்தில் கட்டி முடிக்கப்பட்டிருந்தால், இது உலகின் மிக உயரமான ஹோட்டலாக இருந்திருக்கும்.

ஆனால் அதற்குப் பதிலாக, பூமியின் மிக உயரமான காலியான கட்டிடம் என்ற சாதனையை இது பெற்றுள்ளது. இதை கட்டுவதற்கு 1.6 பில்லியன் பவுண்டுகள் செலவானது.

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு வட கொரியா பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டதால் 1997 யில் இதன் கட்டுமானம் நிறுத்தப்பட்டது.

இந்த கட்டிடத்தில் ஜூலை 2011-ல் வெளிப்புற கண்ணாடி பேனல்கள் நிறுவப்பட்டன. இதற்குப் பிறகு, 2013 ஆம் ஆண்டுக்குள் இந்த ஹோட்டல் கட்டப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது, ஆனால் அது நிறைவேறவில்லை.

இந்த ஹோட்டல் உள்ளே முற்றிலும் காலியாக இருப்பதாக நம்பப்படுகிறது. மேலும், இந்த கட்டிடத்தில் சில குறைபாடுகளும் உள்ளன.

உதாரணமாக, லிப்ட் ஷாஃப்ட் ‘வளைந்து’ விடப்பட்டதாகவும், அதன் தளங்கள் சாய்வாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த ஹோட்டலின் அமைப்பு துருப்பிடித்து பலவீனமாகிவிட்டதாகவும் நம்பப்படுகிறது.

2018-ஆம் ஆண்டில், கட்டிடத்தில் எல்இடி பேனல்கள் நிறுவப்பட்டன. பின்னர் இது வட கொரிய அரசாங்க பிரச்சாரத்திற்கான மாபெரும் திரையாக மாற்றப்பட்டது.

Tags: hotelRyugyong Hotel.
Share
Tweet
SendShare
Previous Post

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் முதல் படம்!

Next Post

அம்மாடியோவ்… இவ்வளவு நீள கூந்தலா? – கின்னஸ் சாதனை படைத்த இந்தியப் பெண்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies