இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த 46 வயது பெண்மணியான ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா சத்தமின்றிக் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அவரது இந்த சாதனையைப் பார்த்து இந்தியப் பெண்கள் எல்லோரும் மிரண்டுபோய் உள்ளனர். அவரை மிகவும் ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர்.
விஷயம் இதுதாங்க, வேறு ஒன்றும் இல்லை. ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா தற்போது இந்தியாவின் மிக நீளமான கூந்தல் உடைவர் என்ற கின்னஸ் சாதனையைப் பெருமையுடன் படைத்துள்ளார்.
1980 -ம் ஆண்டுகளில் இந்தி நடிகைகளின் சிகை அலங்காரங்களால் ஈர்க்கப்பட்ட ஸ்மிதா, தனது கூந்தலையும் அதுபோல வளர்க்க வேண்டும் என முடிவு செய்தார். அதற்காகத் தனது 14 வயது முதலே கூந்தலை பார்த்துப்பார்த்து வளர்த்தார்.
தலைமுடியை வாரத்திற்கு 2 முறை கழுவுவது, உலர்த்துதல், ஸ்டைலிங் என, கூந்தல் பராமரிப்புக்காக சுமார் 2 மணி முதல் 3 மணி நேரம் வரை எடுத்துக் கொண்டார்.
இந்நிலையில்தான், தனது கடுமையான உழைப்பின் பயணாக, ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா 7 அடி மற்றும் 9 அங்குல நீளத்திற்கு முடி வளர்த்துக் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதை கேள்விப்பட்ட அக்கம் பக்கத்து பகுதிகளில் உள்ள இளம் பெண்கள் பலரும் ஆர்வமுடன் வந்து ஸ்மிதாவுடன் ஃசெல்பி எடுத்துக் கொள்கின்றனர்.
இந்திய கலாச்சாரத்தில், தெய்வங்கள் பாரம்பரியமாக மிகவும் நீளமான முடி கொண்டவை. நமது சமூகத்தில், பெண்கள் முடி வளர்த்தார்கள் என்கிறார் ஸ்மிதா பெருமையுடன்.