ஆப்கானிஸ்தான் தூதரகத்தை இந்தியாவில் மீண்டும் திறக்க உள்ளதாக ஆப்கானிஸ்தான் அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தூதரகத்தை இந்தியாவில் திறக்கும் விருப்பத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று இந்தியாவில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
இந்தியாவின் மும்பை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தை மீண்டும் திறக்க உள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையே நட்புறவை வளர்ப்பதற்கும், இந்தியாவில் உள்ள ஆப்கானிய சமூகத்திற்கு சேவை செய்வதற்கான வசதிகளை உருவாக்குவதற்கும் தூதரகம் உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இரு நாட்டுக்கும் இடையே நட்புறவை வளர்க்கும் விதமாக சிறந்த அதிகாரிகள் ஆப்கானிய தூதரகம் நிர்வகிக்கப்படும் என்று கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தானியர்களுக்கான விசா ஆதரவை நீட்டித்தால், ஆப்கானிஸ்தான் மாணவர்கள், நோயாளிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு உதவியாக இருக்கும் என்று இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தலிபான் அரசை அங்கீகரிப்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டுதலைப் பின்பற்றி முடிவெடுப்பதாக இந்தியா கூறியுள்ளது.