இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் நான்காவத போட்டி இன்று ராய்ப்பூரில் நடைபெறுகிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் மூன்று போட்டிகள் நிறைவடைந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
அதேபோல் இரண்டாவது போட்டியிலும் இந்திய அணியே வெற்றி பெற்று முன்னிலை வகித்தது. மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி திடீர் வெற்றியை பதிவு செய்து 2-1 என்ற கணக்கில் உள்ளது.
இந்நிலையில் நான்காவது டி20 போட்டி ராய்ப்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.
இந்திய அணியில் ஸ்ரேயாஸ், திலக் வர்மா, ஜெய்ஸ்வால் ,ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் மற்றும் ரிங் சிங் ஆகியோர் நல்ல முறையில் தங்களது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
நவம்பர் 28 ஆம் தேதி நடைபெற்றபோட்டியில் ருதுராஜ் அதிரடியாக 123 ரன்களை குவித்தார்.
அதேநேரம் இந்திய அணியின் பந்து வீச்சை பொறுத்துவரை சொதப்பலாகவே இருக்கிறது. அக்ஸர் படேன். பிரசித் கிருஷ்ணா, அர்ஜித் சிங் ஆகியோர் ரன்களை அள்ளிக்கொடுத்து வருகின்றனர்.
தீபஹ் சாகர் , முகேஸ் குமார், ரவி பிஸ்னோய் ஆகியோரும் தங்களது திறமையை வெளிப்படுத்த வேண்டும், ஆஸ்திரேலிய அணியினரை பொறுத்தவரை ட்ராவிஸ் ஹெட், மேக்ஸ்வெல் ஆகியோர் நன்றாக பேட்டிங் செய்கின்றனர்.
அதேபோல் பந்து வீச்சை பொறுத்த வரை ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் , கேன் ரிச்சர்ட்சன் மற்றும் தன்வீர் சங்கா ஆகியோர் நல்ல பார்மில் இருக்கின்றனர்.
ஆனாலும், முதல் இரண்டு போட்டிகளில் அந்த அணி தோல்வியையே தழுவியஇச்சூழலில் தோல்வியில் இருந்து மீண்டு வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நாளை நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை வெல்வதற்கான வாய்ப்பு இருக்கும் என்பதால் நன்றாக விளையாட முயற்சி செய்யும்.
அதேபோல், கடைசி சமயங்களில் சொதப்பும் இந்திய அணியும் ஆஸ்திரேலியாவை எப்படியும் வென்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் ஆடும் என்பதால் ரசிகர்களுக்கு பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
மேலும் இப்போட்டியில் வெற்றி வாய்ப்பு கணக்கெடுப்பில் இந்தியா 62% வெற்றி பெறும் என்றும் ஆஸ்திரேலியா 38% வெற்றி பெறும் என்றும் இணையத்தில் பதிவிட்டுள்ளது.