ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தீவிரவாதி ஒருவன் கொல்லப்பட்டான்.
அரிஹால் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த ராணுவத்தினர் போலீசாருடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு குவியல் குவியலாக ஆயுதங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
திடீரென பாதுகாப்புப் படையினரை நோக்கி தீவிரவாதிகள் சுடத்தொடங்கினர். இதையடுத்து ராணுவர் வீரர்கள் நடத்திய பதிலடி தாக்குதலில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
பின்னர், அங்கிருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.