ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1 ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
உலக எஸ்ட்ஸ் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 1ம் தேதி கடைபிடிக்கப்படும் என உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. எய்ட்ஸ், ஹெச்ஐவி குறித்த தகவல்கள், விழிப்புணர்வை, சர்வதேச அமைப்புகள், தனியார் அமைப்புகள், மக்களுக்கு தெரிவிக்க இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.
1988ம் ஆண்டு 90ஆயிரம் முதல் 1.50 லட்சம் பேர் மட்டுமே ஹெச்வி நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அடுத்த 20 ஆண்டுகளில் உலகளவில் 3.30 கோடி பேர் ஹெச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டனர்.
கடந்த 1981ம் ஆண்டு ஹெச்ஐவி வைரஸ் கண்டறியப்பட்டதில் இருந்து இதுவரை 2.50 கோடி மக்கள் இந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன் விளைவாக எய்ட்ஸ் விழிப்புணர்வு, பிரச்சாரம் மேற்கொள்வதற்காக டிசம்பர் 1ம் தேதி எய்ட்ஸ் தினமாக அறிவிக்கப்பட்டது.
உலகில் உள்ள மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, ஹெச்வி வைரசுக்கு எதிராக போராடவும், ஹெச்ஐவி வைரஸுன் வாழ்ந்துவரும் மக்களுக்கும், ஹெச்வி நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் இந்த நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் ஹெச்வி நோய் தீவிரமான உடல் பாதிப்புகளை கொடுக்கும் நோயாகப் பார்க்கப்படுகிறது, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் உலகளவில் ஹெச்ஐவி நோய்க்கு பலியாகின்றனர்.
பிரிவினை, சமத்துவமின்மை, மனித உரிமைகளை அவமதித்தல் உள்ளிட்ட பல குறைபாடுகள் காரணமாக எச்.ஐ.வி உலகளாவிய சுகாதார தொற்றுநோயாக மாறி இன்று தொடர்ந்து வருகிறது.
இன்று , எச்ஐவி நோய்க்கு நவீன அறிவியல் சிகிச்சை முறைகள் வந்துவிட்டன, ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமூகப் பாதுகாப்பும் வழங்கப்படுகிறது. தன்னையும் மற்றவர்களையும் எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றிய உண்மைகளை அறியாததால், நோயுடன் வாழும் பலர் இன்னும் களங்கத்தையும் பாகுபாட்டையும் எதிர்கொள்கின்றனர்.
இதை எதிர்கொள்ள தேவையான அவசர நிதி, அதிக விழிப்புணர்வு, தவறாண எண்ணங்களை ஒழித்தல் மற்றும் உயர்கல்வி வாய்ப்புகள் தேவை.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் எய்ட்ஸ் தினத்திற்கான ஒரு கருப்பொருள் அமைக்கப்படும் அதுபோல இந்த ஆண்டின் கருப்பொருள் ” சமூகங்கள் வழிநடத்தட்டும் “, இது எச்ஐவி பதிலில் சமூகங்களின் முக்கிய பங்கை வலியுறுத்துகிறது.