மேற்கு வங்கத்தில் பள்ளி ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
மேற்கு வங்க பள்ளிகளில் காலியாக இருந்த ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடைபெற்ற தேர்வில் முறைகேடு நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதுகுறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக முன்னாள் பள்ளி கல்வித் துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் திரிணமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஜபிகுல் இஸ்லாம், கொல்கத்தா மாநகராட்சி கவுன்சிலர் பபாதித்யா தாஸ்குப்தா மற்றும் பிதாநகர் நகராட்சி கவுன்சிலர் தேப்ராஜ் சக்ரவர்த்தி. உள்ளிட்டோர் தொடர்புடைய இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.