பழம்பெரும் மலையாள நடிகை ஆர். சுப்புலட்சுமி கொச்சியில் நேற்று காலமானார். அவருக்கு வயது 87.
மலையாள நடிகை ஆர்.சுப்பலட்சுமி 1936 ஆம் ஆண்டு பிறந்தார். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இவர் ஏராளமான மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் படங்களிலும் அவர் நடித்துள்ளார். மேலும் ஒரே ஒரு ஆங்கில படத்திலும் நடித்துள்ளார்.விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்ததன் மூலம் இளைஞர்கள் மத்தியிலும் பிரபலமானார்.
கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நடிகை ஆர். சுப்பலட்சுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிர் பிரிந்தது.
ஆர்.சுப்பலட்சுமி மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சிறந்த நடிகையாக மட்டுமல்லாமல், அவர் ஒரு சிறந்த பாடகியாகவும் திகழ்ந்து வந்துள்ளார்.
சிறந்த பாடகி மற்றும் இசையமைப்பாளரான இவர், பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் நடித்த நந்தனம் படத்தின் மூலம் திரைப்படங்களில் அறிமுகமானார்.
அப்போது அவருக்கு வயது 66. மேலும் கல்யாணராமன், ராப்பகல், திலகம், சிஐடி மூசா, பாண்டிப்படா, ராணி பத்மினி மற்றும் பல படங்களில் அவர் நடித்துள்ளார்.