போலீஸ் அதிகாரியாக, நடித்துவரும் ‘சத்யபாமா’ என்ற படத்திற்காக சண்டை பயிற்சிகள் மற்றும் தற்காப்பு கலைகளை நடிகை காஜல் அகர்வால் கற்று வருகிறார்.
தென்னிந்தியாவில் முன்னணி கதாநாயகியாக வளம் வருபவர் காஜல் அகர்வால். இவர் தனது திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் தெலுங்கில் ‘சத்யபாமா’ என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இப்படத்திற்காக சண்டை பயிற்சி மற்றும் தற்காப்பு கலைகளை அவர் கற்று வருகிறார். இதுகுறித்து பேசிய காஜல் அகர்வால், ”சத்தியபாமா படத்தின் கதையை கேட்டு வியந்து போனேன். இதில் நடித்தே ஆகவேண்டும் என்று முடிவு செய்தேன். தற்போது படப்பிடிப்பு தொடங்கி உள்ள நிலையில் இதில் நடிப்பதற்காக ஐதராபாத்துக்கு குடும்பத்தோடு வந்து தங்கி இருக்கிறேன். குழந்தையை கவனித்துக்கொண்டே படப்பிடிப்பிலும் பங்கேற்கிறேன், என்று கூறினார்.
மேலும் ‘சத்யபாமா’ படத்துக்காக தற்காப்பு கலைகளை கற்றுக்கொண்டேன். விஜயசாந்தியை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு அதிரடி சண்டைக் காட்சிகளில் நடித்து வருகிறேன். படப்பிடிப்பு 65 சதவீதம் முடிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.