கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் 13-வயது சிறுவனை பெண் ஒருவர் வீடு புகுந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்து செல்லும் சிசிடிவி காட்சி பதிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட பெண் மீது குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சிங்காரவேலன் காலணியை சேர்ந்தவர் விஜயன் மீன்பிடி தொழிலாளியான இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த எடிசன் ஷீபா தம்பதியருக்கும் குடும்ப விவகாரம் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது
இந்த நிலையில் நேற்றிரவு விஜயன் வீட்டிற்கு தகராறு செய்ய வந்த எடிசன் மனைவி ஷீபா விஜயன் வீட்டில் இல்லாத நிலையில் அவரது மகன் 13-வயதான விஜின் என்பவரை தாக்கி தகாத வார்த்தைகள் பேசி கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்
இதில் காயமடைந்த சிறுவன் விஜின் சிகிட்சைக்காக குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பெண் சிறுவனை தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் குளச்சல் போலீசார் பெண் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.