வடசென்னையில் மிகவும் பிரசித்தி பெற்ற சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஐஸ் தயாரிக்கும் பல கம்பனிகளில் கடந்த பல மாதங்களாக மின்சார பழுது ஏற்பட்டு பல கம்பெனிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டும், பல கம்பெனிகளில் மின் மீட்டர்கள் எரிந்தும்விட்டது என மின்சார வாரிய அதிகாரியிடம் புகார் செய்தும் மின் மீட்டர்களை மாற்றி கொடுக்காமலும், தொடர்ந்து ஐஸ் கம்பெனி உரிமையாளரிடம் ஆவரேஜ் கட்டணத்தை தொடர்ந்து, தொடர்ந்து காலதாமதம் இன்றி கட்டவிலை என்றால் மின் இணைப்பை துண்டித்து விடுவோம் என்று மிரட்டி வேறு வழியின்றி ஐஸ் கம்பெனி உரிமையாளர்கள் ஆவரேஜ் கட்டணத்தை கட்ட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு ஆவரேஜ் கட்டணத்தை கட்டி வருகிறார்கள்.
ஏற்கனவே தமிழக மின்சார வாரியத்தின் மின் கட்டண உயர்வு, ஃபிக்ஸட் டெபாசிட், டெபாசிட், பிக் அவர்ஸ் மின் கட்டண உயர்வு, ஜிஎஸ்டி, சேவை கட்டணம் இப்படி பல்வேறு கட்டணங்களால் தொழிற்சாலைகள் நடத்த முடியாமல் சிரமப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தவறான அணுகுமுறையின் காரணமாக பல மாதங்களாக ஆவரேஜ் கட்டணம் வாங்குவதனால் ஒவ்வொரு ஐஸ் கம்பெனிக்கும் ஒரு மாதத்திற்கு குறைந்ததும் சுமார் ரூபாய் 2 லட்சம் முதல் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் பல மாதங்கள் ஆகியும் எம்.ஆர்.டி. அதிகாரி தற்போது இல்லை, அவர் வெளியில் இருக்கிறார் அவர் வருவதற்கு காலதாமதம் ஆகின்றது என்று பொய்யான நொண்டி சாக்கை சொல்லி எம்.ஆர்.டி. அதிகாரியை குற்றப்படுத்தி மற்ற அதிகாரிகள் தப்பித்துக் கொள்கிறார்கள்.
மின் மீட்டர்களை சரி செய்யாமலும், மின்மீட்டர்கள் வடசென்னை பகுதிக்கு தமிழ்நாடு மின்சார வாரிய உயர் அதிகாரிகளால் வழங்கப்படாததால், சரி செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
இதனால் பாதிக்கப்படுவது மின்சார வாரியமும் அல்ல, மின்சார வாரிய அதிகாரிகளும் இல்லை, மின்சாரத்தை பயன்படுத்தும் மின் நுகர்வோர் ஆகிய கம்பெனி உரிமையாளர்கள் தான். இதனால் ஐஸ் கம்பெனி உரிமையாளர்கள்.
ஐஸ் விலையை மாற்றி அமைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுவதால், ஐஸ் பயன்படுத்தும் விசைப்படகு உரிமையாளர்கள், நாட்டு படகு உரிமையாளர்கள், மீனவ பெருமக்கள், பொதுமக்களும், வியாபாரிகளும் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள்.
ஆவரேஜ் கட்டணம் முறையாக இல்லை, கட்டணத்தை திருத்தி சரியான கட்டணத்தை சொல்லுங்கள் என்று ஐஸ் கம்பெனி உரிமையாளர்கள் முறையிட்டால், அந்த ஐஸ் கம்பெனி உரிமையாளர் மீது ஆடிட்டிங் போட்டு மேலும் சுமையை சுமத்தி இரண்டு லட்சத்துக்கு பதிலாக ஐந்து லட்சம் கட்ட வேண்டும் என்று குழப்பத்தை ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் ஆவரேஜ் கட்டணம் என்று வாங்கும் தொகையை ஒருநாளும் மின்சார வாரியம் திருப்பிக் கொடுத்ததாக வரலாறு இல்லை. எனவே இந்த விவகாரத்திற்கு உடனே தீர்வு காண வேண்டும் இல்லையெனில் போராட்டத்தில் குதிப்பதை தவிர வேறு வழி இல்லை என ஐஸ் கம்பெனி உரிமையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.