தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநருடன் அஜித் இணைய உள்ளதாகவும் தகவல்வெளியாகி உள்ளது.
அஜித் நடிப்பில் பிரபல இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கி வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில், விரைவில் தனது அடுத்த கட்ட படப்பிடிப்பில் அஜித் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த உடனே அஜித் தனது 63வது பட பணிகளை துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த திரைப்படத்தை அண்மையில் மார்க் ஆண்டனி திரைப்படத்தை கொடுத்த தீவிர அஜித் ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாகவும், மைத்திரி மூவிஸ் அந்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இன்னும் அவருடைய 62 மற்றும் 63வது திரைப்பட பணிகளே முடியாத நிலையில், தல அஜித் 64 வது திரைப்படம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநருடன் அஜித் இணைய உள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
தற்பொழுது விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வரும் வெற்றிமாறன், அஜித்திடம் ஒரு கதையை கூறியுள்ளதாகவும், அதற்கு அஜித் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில்அஜிதின் 64வது திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது அவருடைய விடுதலை திரைப்படத்தை தயாரித்து வரும் ஆர்.எஸ் இன்ஃபோடைன்மென்ட் நிறுவனம் அந்த திரைப்படத்தை தயாரிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் தனது விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாக பணிகளை முடிக்கும் வெற்றிமாறன், அடுத்தபடியாக “வாடிவாசல்” படப் பணிகளை துவங்க உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆகவே சூர்யாவின் வாடிவாசல் பட பணிகளை முடித்த பிறகு, அஜித்தின் 64வது பட பணிகளை அவர் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.