30 ஆண்டுகளுக்குள் பொருளாதாரத்தில் 30 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை சேர்க்கும்!
Jul 26, 2025, 05:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

30 ஆண்டுகளுக்குள் பொருளாதாரத்தில் 30 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை சேர்க்கும்!

- மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்!

Web Desk by Web Desk
Dec 1, 2023, 07:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

30-ன் சக்தி இந்தியாவை இயக்குகிறது – 30 ஆண்டுகளுக்குள் பொருளாதாரத்தில் 30 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை சேர்க்கும் கனவு என  மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

30 வயதிற்கு உட்பட்டவர்களின் முயற்சியால் 30 ஆண்டுகளுக்குள் நமது பொருளாதாரத்தில் 30 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை சேர்க்கும் கனவு இன்று இந்தியாவை இயக்குகிறது. இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் பஹ்ரைன் கிளை சார்பில் நடைபெற்ற நிகழ்வில் இன்று உரையாற்றிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் இதனைத் தெரிவித்தார்.

முதலீட்டாளர்களுக்கு இந்தியா ஓர் உலகளாவிய பிரகாசமான இடமாகும். அங்கு நமது சந்தை மூலதனம் 2 நாட்களுக்கு முன் 4 டிரில்லியன் டாலரைத் தொட்டுள்ளது என்று கூறினார்.

உலக நாடுகளுடன் ஈடுஇணையற்ற, அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இந்தியா செயல்படுகிறது. ஆணவத்துடன் அல்ல என சுட்டிக்காட்டினார். இந்தியா 10 ஆண்டுகளில் துறைமுகத் திறன் இரட்டிப்பாக்கப்பட்ட ஒரு பொருளாதாரமாகும்.

அங்கு வணிக விமான நிலையங்கள் கடந்த ஒன்பது ஆண்டுகளில் 74-ல் இருந்து 150 ஆக இரட்டிப்பாகியுள்ளன. மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 225 ஆக மேலும் வளரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அங்கு நவீன உயர்தர ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைகளின் பெரிய கட்டமைப்புக்குத்  துணையாக 140 புதிய உள்நாட்டு நீர்வழிகள் தொடங்கப்பட்டுள்ளன. உலகின் பிற பகுதிகளில் நாம் காணும் அழகான உள்கட்டமைப்பு இப்போது இந்தியாவில் உருவாக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

பார்வையாளர்கள் தில்லியில் வந்து புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைப் பார்க்க வேண்டும் அல்லது உயர்தர சர்வதேசக் கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாரத் மண்டபத்தைப் பார்வையிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

வளமான, துடிப்பான பொருளாதாரம், இந்திய மக்களை கவனித்து, அவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை வழங்கும் ஓர் அமைப்பு, எளிதான வாழ்க்கை வாய்ப்புகளுடன் கூடிய வாழ்க்கைத் தரம் ஆகியவற்றைக் காணுமாறு அவர் அவர்களைக் கேட்டுக்கொண்டார்.

வளர்ச்சி, நல்ல நிர்வாகம், மன உறுதி, உண்மையான நம்பிக்கை, நிலைத்தன்மையைப் பிரதிபலிக்கும் பசுமைத் தொழில்நுட்பங்கள் ஆகிய 5 ஜி திட்டங்களில் இந்தியா இன்று முன்னணியில் உள்ளது என்று பிரதமர் கூறினார்.

450-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட பஹ்ரைனில் உள்ள இந்தியர்களின் மிகப்பெரிய ஒழுங்கமைக்கப்பட்ட தொழில்முறை அமைப்பாக பட்டயக் கணக்காளர்கள் உள்ளனர் என்று கூறினார்.

பஹ்ரைனின் வளர்ச்சியில் அவர்கள் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள், உயர்ந்த நேர்மை, உயர்ந்த ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவற்றில் அவர்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் இருப்பதாக அவர் கூறினார்.

பட்டயக் கணக்காளர்கள் உலகெங்கிலும் பஹ்ரைனிலும் இந்தியாவின் தூதர்களாக உள்ளனர் என்று  கூறினார். அவர்கள் செய்யும் அற்புதமான பணிகளுக்காகவும்,  அவர்களின் பங்களிப்பிற்காகவும் அவர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், பஹ்ரைனுக்கான நமது தூதர்கள் என்ற முறையில், அவர்கள் தங்கள் அர்ப்பணிப்பு, ஒருமைப்பாடு, கடின உழைப்பு மற்றும் ஆர்வத்தால் இந்தியாவை பெருமைப்படுத்துகிறார்கள் என்றார்.

தலைமைத்துவம், நிலைத்தன்மை, புவிசார் அரசியல், மனித ஆற்றல், ஆரோக்கியமான வாழ்க்கை – சமகால விஷயங்கள் மற்றும் அவசியமான விஷயங்கள் குறித்த விவாதத்தை ஏற்பாடு செய்ததற்காக அவர்களைப் பாராட்டினார்.

Tags: Union Minister Piyush Goyal
ShareTweetSendShare
Previous Post

2028இல் இந்தியாவில் பருவ நிலை உச்சி மாநாடு : பிரதமர் மோடி ஆர்வம்!

Next Post

இந்தியா vs ஆஸ்திரேலியா டி20 : இந்தியா பேட்டிங்!

Related News

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies