பாஜக தலைவர் ஜேபி நட்டாவின் 63-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இன்று தனது 63-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
அதில், ஜேபி.நட்டாவின் எளிமையான மற்றும் அன்பான குணம் அவரைப் பலருக்குப் பிடித்திருக்கிறது. கடந்த பல தசாப்தங்களாக அவர் கட்சிக்காக கடினமாக உழைப்பதை பார்த்திருக்கிறேன்.”
மேலும், அவர் தன்னை ஒரு சிறந்த எம்.எல்.ஏ., எம்.பி. மற்றும் அமைச்சராகவும் சிறப்பித்துக் கொண்டுள்ளார். மக்கள் சேவையில் நீண்ட மற்றும் ஆரோக்கியமாக வாழ பிரார்த்திக்கிறேன்” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.