10-வது புரோ கபடி லீக் தொடர் அகமதாபாத்தில் இன்று தொடங்குகிறது.
இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கிடையே நடைபெறும் கபடி லீக் தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்குபெறவுள்ளன. பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி கே.சி, குஜராத் ஜெயண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோதாஸ் ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன.
டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்கும் இந்த தொடர் 2024 பிப்ரவரி 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல் நாளான இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.
அகமதாபாத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில், குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இரண்டாம் போட்டி இரவு 9 மணியளவில் யு மும்பா மற்றும் உ.பி. யோதாஸ் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது.