வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், தற்போது ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது 3-ஆம் தேதி புயலாக மாறி, 4-ஆம் தேதி கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் அருகே உருவாகி, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நேற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இது நேற்று மாலை நிலவரப்படி, புதுச்சேரிக்கு தென்கிழக்கில், 730 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கில், 740 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆந்திரா மாநிலம் நெல்லூருக்கு தென் கிழக்கில், 860 கிலோ மீட்டர் தொலைவிலும், மசூலிப்பட்டினத்துக்கு தென் கிழக்கில், 910 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டிருந்தது.
இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும், வலுப்பெற்று, இன்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது 3-ஆம் தேதி புயலாக வலுப்பெறும். இதற்கு மியான்மர் நாடு பரிந்துரை செய்துள்ள, ‘மிக்ஜாம்’ என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.