பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கிரிக்கெட் விளையாடுவது மட்டுமின்றி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். அதேபோல் விராட் கோலி தொழிலதிபராகவும் உள்ளார்.
ஆம், டெல்லி, மும்பை, கொல்கத்தா, பூனே, பெங்களூரு போன்ற நகரங்களில் ஒன் 8 கம்யூனி என்ற ஹோட்டலை நிறுவியுள்ளார்.
அதில் மும்பை மகாராஷ்டிராவில் உள்ள One 8 ஹோட்டலில் வேட்டி கட்டிக்கொண்டு சென்ற மதுரையைச் சேர்ந்த ராவண ராம் என்ற தமிழரை உள்ளே அனுமதிக்க ஹோட்டல் நிர்வாகம் மறுப்பு தெரிவித்து அராஜகம் செய்துள்ளது.
தமிழகத்தில் பல இரசிகர்களைப் பெற்றுள்ள விராட் கோலியின் ஹோட்டலில் இப்படி தமிழருக்கே அனுமதி அளிக்காமல் மறுப்பு தெரிவித்தது கோலியின் இரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.