34 -வது கோனார் நடன விழா ஒடிசாவில் பூரி மாவட்டத்தில் உள்ள கொனார்க் சூரியன் கோயிலில் நடைபெற்று வருகிறது.
ஒடிசாவில் பூரி மாவட்டத்தில் உள்ள கொனார்க் சூரியன் கோயிலில் 34 வது சர்வதேச கொனார்க் நடன திருவிழா நேற்று தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை இந்த நடன விழா நடைபெறுவது வழக்கம். ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த நடன விழா ஒடிசாவில் நடைபெறும் மிகப்பெரிய நடன விழாக்களில் ஒன்றாகும்.
கொனார்க் சூரியன் கோவில் 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோவில் சிவப்பு மணற்பாறைகளாலும் கருப்பு கிரானைட் கற்களாலும் கட்டப்பட்டது. கல்லில் செதுக்கப்பட்ட பிரம்மாண்ட தேர் வடிவ சூரியன் கோவில் இது.
இந்த கோவிலில் உள்ள நடன மண்டபத்தில் தான் இந்த கொனார்க் நடன விழா நடைபெறும். இந்திய கலாச்சார பாரம்பரிய காலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். இதனை காண பல சுற்றுலா பயணிகளும் ஆர்வமுடன் செல்வார்கள்.
1986 ஆம் ஆண்டு முதல் இந்த நடன விழா ஒடிசாவில் நடைபெற்று வருகிறது. ஒடிசாவை சுற்றுலா தலமாக பிரபலப்படுத்தவும், நடன பாரம்பரியத்தை மேம்படுத்தவும் ஒடிசா சுற்றுலா துறை மற்றும் ஒடிசி ஆராய்ச்சி மையம் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இத்துடன் இணைந்து ஒடிசா பூரி கடற்கரையில் மணல் சிற்ப கலை விழாவும் நடைபெறும்.