நண்பர்களை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிப்பதாக இத்தாலி பிரதமருடன் எடுத்துக்கொண்ட செல்பி தொடர்பாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமையில் பருவநிலை பாதுகாப்பு நாடுகள் கூட்டமைப்பின் மாநாடு(காப்28) துபாயில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனியுடன் செல்பி எடுத்துள்ளார்.
இதனை எக்ஸ் தளத்தில் இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா பகிர்ந்துள்ளார். ‘காப்28-ல் நல்ல நண்பர்கள்’ எனவும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். இருவரின் பெயரையும் இணைத்து ‘மெலோடி’ என்கிற ஹேஷ்டேக்கும் பதிவிட்டிருந்தார். இந்த பதிவு இணையத்தில் வைரலானது.
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நண்பர்களை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.