மிக்ஜாம் புயல் கரையைக் கடக்க உள்ளதால் பெரும் கனமழை எச்சரிக்கையை சென்னை வானிலை மையம் விடுத்துள்ளது .
இதன் காரணமாக டிசம்பர் 4 ஆம் தேதி நடக்கவிருந்த அண்ணா பல்கலைக் கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக் கழக நிர்வாகம் அதிகாரப் பூர்வமாக தெரிவித்துள்ளது.
செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக் கழகமும் இதே போல், வரும் திங்கள் கிழமை டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெற இருந்த பல்கலைக் கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது . ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுகளுக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று சென்னை பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது .