சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக்கடலில் புதுவையிலிருந்து சுமார் 330 கிலோமீட்டர் கிழக்கு தென்கிழக்கேயும், சென்னையில் இருந்து சுமார் 340 கிலோமீட்டர் தென்கிழக்கேயும் மையம் கொண்டுள்ளது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணிநேரத்தில் புயலாக வலுப்பெற்று 04ம் தேதி காலை தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஓட்டியுள்ள வட தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 மணிநேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அதன்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.