மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி படுவீக்காக உள்ளது. காரணம், பாஜக சென்று கமல்நாத் ஆட்சி அதிகாரத்தை இழந்ததோடு, தனக்கான இமேஜையும் இழந்துள்ளார். திக் விஜய் சிங் பெரிய அளவில் ஆக்டிங்காக இல்லை. இதனால், காங்கிரஸ் வலு இழந்து காணப்படுகிறது.
இதனிடையே, கடந்த 4 முறை பாஜகதான் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. சிவராஜ்சிங் அங்கு ஆட்சி அமைத்தார். பின்னர், கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. ஆனால், காங்கிரஸ்ஸில் இருந்த ஜோதிராத்திய சிந்தியா, ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு, பாஜகவில் இணைந்து, அமைச்சராகிவிட்டார்.
இதனால், ஒரே வருடத்தில் கமல்நாத் ஆட்சியை இழந்தார். அங்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் மேலும் வெற்றி வாகை சூடினர். இதனால், இந்த மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக, மத்திய பிரதேசம் மாநிலம் பாஜக ஆதரவு மாநிலமாகும். குஜராத்தைவிடப் பாஜகவின் கோட்டையாகத் திகழ்ந்து வருகிறது. இதனால், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான திக் விஜய் சிங் மற்றும் கமல் நாத் ஆகியோரின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வருகிறது.
இந்த நிலையில், காலை 10.30 மணி நிலவரப்படி, பாஜக 131 தொகுதிகளிலும், காங்கிரஸ் 84 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.