இராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிந்து, தற்போது தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு வருகிறது.
இதில், காலை 10 மணி நிலவரப்படி, ராஜஸ்தான் மாநிலத்தில் 117 தொகுதிகளிலும், மத்திய பிரதேசம் மாநிலத்தில் 147 தொகுதிகளிலும், சத்தீஸ்கரில் 44 தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.
இதனால், பாஜக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து புது டெல்லியில் உள்ள பாஜக அலுவலகம் முன்பு தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். மேலும், பாஜக மூத்த தலைவர்கலும் பாஜக அலுவலகம் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில், 3 மாநிலங்களில் பாஜகவின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் பாரதப் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பாஜக அலுவலகம் வர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரை வரவேற்கும் வகையில் தடபுடலான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பாஜக தொண்டர்கள் தேர்தல் வெற்றியை உற்சாகமாகக் கொண்டாட தயாராகி வருகின்றனர்.