தெலுங்கானா முதல்வராக உள்ள சந்திரசேகர் ராவ் மொத்தம் 2 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார்.
கஜ்வெல் மற்றும் காமரெட்டி தொகுதிகளில் அவர் களமிறங்கி உள்ளார். ஆனால், இந்த 2 தொகுதிகளிலும் சந்திசேகர் ராவ் பின்னடைவை சந்தித்துள்ளார்.
இதில் கஜ்வெல் தொகுதியில், சந்திரசேகர் ராவுக்கு எதிராகப் பாஜகவின் மூத்த தலைவர் எட்டலா ராஜேந்தர் களமிறங்கி தூள் கிளப்பி வருகிறார்.
காமரெட்டியில் காங்கிரஸ் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி சந்திரசேகர் ராவை எதிர்த்து போட்டி, அவரைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
இதன் காரணமாக, தெலுங்கானா முதல்வரும், பாரதிய ராஷ்டிய சமிதி கட்சியின் முதல்வருமான சந்திரசேகர் ராவ் பின்னடைவை சந்தித்து வருகிறார். இதனால், பாரதிய ராஷ்டிய சமிதி கட்சித் தொண்டர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.
பாரதிய ராஷ்டிய சமிதி கட்சித் தலைவர் சந்திரேசகர ராவ்வை வீட்டுக்கு அனுப்புவோம் எனப் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் சபதம் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.