ஐ.என்.எஸ் காட்மாட், வட பசிபிக் பெருங்கடலின் நீண்ட தூர செயல்பாட்டு நிலைநிறுத்தலில் ஜப்பானின் யோகோசுகாவிற்குள் நுழைந்தது.
ஐ.என்.எஸ் காட்மாட், வட பசிபிக் பெருங்கடலின் நீண்ட தூர செயல்பாட்டு நிலைநிறுத்தலில் டிசம்பர் 02, 2023 அன்று ஜப்பானின் யோகோசுகாவிற்குள் நுழைந்தது.
இந்த பயணத்தின் போது தொழில்முறை தொடர்புகள் மற்றும் சமூக நல நடவடிக்கைகள் உள்ளிட்டவை திட்டமிடப்பட்டுள்ளன.
ஜப்பான் கடல்சார் தற்காப்பு படையுடனான (ஜே.எம்.எஸ்.டி.எஃப்) தொடர்புகளில் கப்பல் பயணங்கள், தொழில்முறை கருத்துப் பரிமாற்றம், கூட்டு யோகா முகாம் மற்றும் கடல்சார் கூட்டாண்மை பயிற்சிக்கான (எம்.பி.எக்ஸ்) ஒருங்கிணைப்பு கூட்டம் ஆகியவை அடங்கும்.
யோகோசுகாவில், இந்தக் கப்பல் டிசம்பர் 04, 2023 அன்று ஜப்பானில் உள்ள இந்திய வம்சாவளியினர் முன்னிலையில் கடற்படை தினத்தைக் கொண்டாடும்.
சமீபத்தில், ஐ.என்.எஸ் காட்மாட் இரு கடற்படைகளுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட பரஸ்பர வழங்கல் மற்றும் சேவைகளின் (ஆர்.பி.எஸ்.எஸ்) கொள்கைகளின் கீழ் நவம்பர் 28, 2023 அன்று ஒகினாவாவுக்கு அருகிலுள்ள ஜே.எஸ்.டோவாடாவின் ஜே.எம்.எஸ்.டி.எஃப் விரைவு போர் ஆதரவு கப்பலுடன் எரிபொருள் நிரப்பும் பணியை மேற்கொண்டுள்ளது.
ஐ.என்.எஸ் காட்மாட்டின் ஜப்பான் பயணம் மற்றும் ஜே.எம்.எஸ்.டி.எஃப் உடனான கலந்துரையாடல் ஆகியவை இந்தோ-பசிபிக்கிற்கான இரு நாடுகளின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான கடல்சார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
ஐ.என்.எஸ் காட்மாட் என்பது உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் ஆகும், இது அதிநவீன ஏ.எஸ் ஆயுத தொகுப்பைக் கொண்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.