மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றிக்கும் நிலையில், இரட்டை இன்ஜின் அரசு மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையால் கிடைத்த வெற்றி என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருக்கிறார்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கும் கடந்த நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. இம்மாநிலங்களில் மிசோராம் தவிர்த்து மீதிமுள்ள 4 மாநிலங்களில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.
இதில், காங்கிரஸ் ஆட்சி செய்த ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களை பா.ஜ.க. கைப்பற்றி இருப்பதோடு, மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆட்சியை தக்க வைத்திருக்கிறது. இந்த சூழலில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் கிடைத்த வெற்றி இரட்டை இன்ஜின் அரசு மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், “இது மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க.வுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். பா.ஜ.க. அரசு வேலை செய்திருக்கிறது. இரட்டை இன்ஜின் அரசு, பிரதமர் மோடியின் தலைமை மற்றும் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹானின் செயல்பாடு ஆகியவற்றின் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். வெற்றி பெற்ற அனைவரையும் வாழ்த்துகிறேன்” என்றார்.