4 மாநில தேர்தலில் 3 மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்றதற்கு பாரதப் பிரதமர் மோடியின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையே காரணம் என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்கிறது. இந்த தேர்தலில் 3 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதற்கு பாரதப் பிரதமர் மோடியே காரணம். மோடி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையே இந்த 3 மாநில வெற்றி பிரதிபலிக்கிறது.
இந்த தேர்தல் செமி பைனல் ஆட்டம் போன்றது. இந்த தேர்தல் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாகும்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 400 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு. இந்த தேர்தலில் மட்டுமல்ல, இனி வரும் எல்லா தேர்தலும் ராகுல் காந்தியை மக்கள் புறக்கணித்துவிட்டனர் என்றார்.