உலகின் மிக மோசமான போபால் விஷவாயு பேரழிவின் 39 வது ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்படும் நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நினைவஞ்சலி செலுத்தினார்.
1984 டிசம்பர் 2மற்றும் 3ஆம் தேதிகளில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் செயல்பட்டு வந்த யூனியன் கார்பைட் இந்தியா லிமிடெட் (யுசிஐஎல்) தொழிற்சாலையில் இருந்து மீதில் ஐசோசயனேட் (எம்ஐசி) என்ற நச்சு வாயு வெளியேறியதில் 5,295 பேர் உயிரிழந்தனர்.
இதன் 39-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
இதனையடுத்து அந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நினைவஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போபாலில் விஷ வாயு விபத்து தொடர்பான சம்பவத்தை நினைவுகூர்ந்தார். அந்த விபத்தை நினைத்தார் அதிர்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறினார்.