இது சாதாரண வெற்றி அல்ல: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்!
Sep 27, 2026, 07:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இது சாதாரண வெற்றி அல்ல: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 3, 2023, 05:46 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரதமர் மோடியின் உத்தரவாதத்தின் பேரில், 4 மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் மீண்டும் தங்கள் ஆசீர்வாதங்களை வழங்கி இருக்கிறார்கள். இதை நீங்கள் உன்னிப்பாகப் பார்த்தால், இது சாதாரண வெற்றி அல்ல என்பது புரியும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்திருக்கிறார்.

5 மாநிலங்களுக்கு நடந்த சட்டமன்றத் தேர்தலில், மிசோராம் தவிர்த்து மீதமுள்ள 4 மாநிலத் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க. அமோக வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. இம்மாநிலங்களில் தனிப் பெரும்பான்மையுடன் பா.ஜ.க. ஆட்சி அமைக்கிறது.

அதேசமயம், தெலங்கானா மாநிலத்திலும் குறிப்பிடத்தக்க வெற்றியை பா.ஜ.க. பதிவு செய்திருக்கிறது. அதாவது, கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. வெறும் 1 இடத்தில் மட்டுமே வெற்றிபெற்றிருந்த நிலையில், தற்போது 9 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. இது பா.ஜ.க.வுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகவே கருதப்படுகிறது.

இந்த நிலையில், தேர்தல் வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “பிரதமர் மோடியின் உத்தரவாதத்தின் பேரில், 4 மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் மீண்டும் பிரதமர் மோடிக்கு தங்களது ஆசீர்வாதங்களை வழங்கி இருக்கிறார்கள். இதை நீங்கள் உன்னிப்பாகப் பார்த்தால், இது சாதாரண வெற்றி அல்ல என்பது புரியும்.

குறிப்பாக, மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. வரலாற்று வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. அதேபோல, ராஜஸ்தானில் அறுதிப் பெரும்பான்மையுடன் பா.ஜ.க. வெற்றி பெற்றிருக்கிறது. மேலும், சத்தீஸ்கரிலும் பா.ஜ.க. அபார வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. அதோடு, தெலங்கானாவில் கடந்த முறை பா.ஜ.க. ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. ஆனால், தற்போது 9 இடங்களில் முன்னிலையில் இருக்கிறோம்” என்றார்.

மேலும், காங்கிரஸ் கட்சியின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குற்றச்சாட்டு தொடர்பாக பேசிய மத்திய அமைச்சர், “இந்தியாவின் அரசியல் மற்றும் தேர்தல் முறை உலகளவில் பாராட்டப்படுகிறது. ஒருவேளை நாடு பாராட்டப்படுவதை காங்கிரஸ் விரும்பவில்லைபோ. இது மிகவும் துரதிருஷ்டவசமானது. ஆனால், EVM மோசடி குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் கேலிக்குரியதாக இருக்கிறதே தவிர, வேறு ஒன்றும் இல்லை” என்றார்.

Tags: Central Ministerpiyush goyalbjp won3 state Assembly
Share
Tweet
SendShare
Previous Post

போபால் விஷ வாயு கசிவு 39-வது நினைவு தினம்!

Next Post

4-ம் தேதி மெட்ரோ இரயில் இயங்குமா?

Related News

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

அட்டிகா கோல்டு நிறுவனம் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies