ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!
Sep 27, 2026, 10:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 27, 2026, 09:34 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆசிய விளையாட்டு கபடி போட்டியில் இந்திய மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், மகளிர் கபடி இறுதிப் போட்டியில் இந்தியாவும், ஈரானும் மோதின. விறுவிறுப்பாக நடந்த போட்டியில் இந்திய அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தது. இறுதியில் 37க்கு 34 என்ற புள்ளிக் கணக்கில் ஈரானை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. வெற்றி பெற்றதும் இந்திய வீராங்கனைகள் தேசியக் கொடியை ஏந்திக்கொண்டு வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆடவர் கபடி இறுதிப் போட்டியிலும் ஈரான் அணியை இந்தியா எதிர்கொண்டது. விறுவிறுப்பான ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் வெற்றிக்காக போராடினர். முதல் பாதியில் பின்தங்கிய இந்தியா, இரண்டாவது பாதியில் அபாரமாக விளையாடி 40-க்கு 34 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. ஆசிய விளையாட்டு கபடி போட்டியில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளன.

ஆசிய விளையாட்டு தொடரின் மகளிர் ஓட்ட பந்தயத்தில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. ஜப்பானில் நடந்து வரும் இந்த தொடரில், மகளிர் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், 53.21 வினாடிகளில் இலக்கை கடந்து இந்தியாவைச் சேர்ந்த Prachi வெண்கலப்பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தியாவுக்கு 14 வெண்கல பதக்கங்கள் கிடைத்துள்ளன.

ஆசிய விளையாட்டு தொடரின் ஆடவர் குண்டு எறிதலில் இந்தியா வெள்ளிப்பதக்கம் வென்றது. ஆடவர் குண்டு எறிதலில் 20.64 மீட்டர் தூரம் வரை குண்டு எறிந்து இந்தியாவின் தஜிந்தர் பால் சிங் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். ஈரான் வீரரிடம் நூலிழையில் தங்கப்பதக்கத்தை தவறவிட்டார். தஜிந்தர் பால் சிங் கடந்த 2018 மற்றும் 2022ம் ஆண்டுகளில் ஆசிய போட்டியின் குண்டு எறிதலில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பதக்கம் வென்ற இந்திய வீரர்களான தஜிந்தர் பால் சிங், ப்ராச்சிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் பல இலக்குகளை அடைய வேண்டும் என இருவரும் எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.

Tags: kabaddi competition.Asian Games kabaddi competition.india won goldkabaddi final
Share
Tweet
SendShare
Previous Post

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

Next Post

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

Related News

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

அட்டிகா கோல்டு நிறுவனம் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

ஜெம் வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை – சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல்!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடிகர் தனுஷ் தரிசனம்!

ஆசிய விளையாட்டு போட்டி – கபடியில் தங்கம் வென்றது இந்திய மகளிர் அணி!

தெற்காசியா மீண்டும் ஆபத்தான நிலையை எட்டாமல் இருக்க, காஷ்மீர் விவகாரத்திற்கு தீர்வு காண வேண்டும் : ஷெபாஸ் ஷெரீப் மறைமுக மிரட்டல்!

ஆசிய விளையாட்டு போட்டி – கோலுன்றி உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்று தமிழக வீராங்கனை பரணிகா இளங்கோவன் சாதனை!

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக பாஸ் விற்பனையில் முறைகேடு – வினோஜ் பி.செல்வம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்புடைய வீடியோக்களை வெளியிட தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஜெம் வீரமணியின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு – போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies