கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் - சிறப்பு தொகுப்பு!
Sep 27, 2026, 07:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 27, 2026, 07:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாட்டையே உலுக்கிய கான்பூர் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் மருமகளுக்கு இந்தக் கொலையில் தொடர்பு இருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில் சொந்த மகனே தந்தையைக் கொன்ற கொடூரம் விசாரணையில் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. ஒரு கிரைம் சினிமாவை விட திகிலூட்டும் இந்த கொலை வழக்கு பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நடந்த ஒரு கோடீஸ்வர மருந்து வியாபாரியின் கொலை வழக்கு, நாடு முழுவதும் உள்ள பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த செப்டம்பர் 5ம் தேதி, கல்யாண்பூரில் உள்ள ‘ரத்தன் ஆர்பிட்’ அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் 63 வயதான வினீத் மினோச்சா மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

மருந்து விநியோகஸ்தர்கள் போல நடித்து வீட்டிற்குள் நுழைந்த இருவர், வினீத் மினோச்சாவை 26 முறை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டுச் சுவரேறித் தப்பிச் சென்றதாகக் கூறப்பட்டது.

கோடிகளில் புரளும் மருந்து வியாபாரியான வினீத் மினோச்சா கொலை வழக்கை விசாரித்த கான்பூர் காவல் துறையினர், பல கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.

கொலை நடந்த சில மணிநேரங்களிலேயே வினீத்தின் முன்னாள் ஊழியரான விஷால் கௌதம் மற்றும் அவரது நண்பர் ராஜ்கிஷோர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

வினீத்தின் வீட்டுக்கான நகல் சாவி விஷாலிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. தாக்குதலின் போது அணிந்திருந்ததாகக் கருதப்படும் ரத்தக்கறை படிந்த ஆடைகள் கான்பூர் ரயில் நிலையத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட இருவரும் வினீத்தின் மருமகள் ஷாலு மினோச்சா தான் அவரைக் கொலை செய்ய சொன்னதாக கூறியதை அடுத்து ஷாலு மினோச்சாவையும் காவல்துறையினர் கைது செய்தனர். தனது மாமனாரைக் கொல்வதற்காக ஷாலு 6 லட்சம் ரூபாய் பணம் கொடுத்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

கைது செய்யப்பட்ட மூவரிடமும் 24 மணிநேரம் நடத்தப்பட்ட விசாரணையின்போது வழக்கின் போக்கே மாறியது. இறுதியில், காவல்துறை வெளியிட்ட தகவல் அனைவரையும் தூக்கிவாரிப் போடச் செய்துள்ளது

வினீத்தின் 34 வயது மகன் சுப்ரத் மற்றும் விஷால் ஆகியோருக்கு இடையே 300-க்கும் மேற்பட்ட முறை தொலைபேசி உரையாடல்கள் நடந்திருப்பது அழைப்புப் பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. இவ்வழக்கில் ஆய்வு செய்யப்பட்ட அனைத்துத் தொடர்புகளிலும் இதுவே மிக அதிக எண்ணிக்கையிலான உரையாடலாகும்.

கொலைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, கடந்த செப்டம்பர் 3 ம் தேதி ஒரு புதிய சிம் கார்டை வாங்கியுள்ள விஷால் அந்த புதிய எண்ணிலிருந்து முதல் அழைப்பைச் சுப்ரத்-திற்கே செய்ததும் கொலைக்கு முன்னதாகப் பல இடங்களில் விஷால் மற்றும் சுப்ரத் அலைபேசி இருப்பிடங்கள் ஒரே இடத்தில் இருந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இருவருக்கும் இடையே நடந்த, பின்னர் அழிக்கப்பட்ட (deleted) உரையாடல்கள் அனைத்தும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.

கைதானவர்களிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணை, சிசிடிவி காட்சிகள் மற்றும் தொலைபேசி அழைப்பு விவரங்களின் (CDR) அடிப்படையில் நடத்தப்பட்ட குறுக்கு விசாரணையில் உண்மை வெளிவந்துள்ளது.

தந்தை வினீத்தை கொலை செய்ய விஷாலுக்கு 6 லட்சம் ரூபாய் பேரம் பேசியதே அவரது சொந்த மகன் சுப்ரத் என்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து திரைக்குப் பின்னால் நின்று இக்கொலையைத் திட்டமிட்டுச் செயல்படுத்தியது மருமகள் ஷாலு அல்ல, சொந்த மகன் சுப்ரத் தான் என்று குற்றம் சாட்டியுள்ள காவல்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

முன்னதாக குடிப்பழக்கம், சூதாட்டம் மற்றும் பந்தயங்கள் போன்ற பல தீய பழக்கங்களுக்கு அடிமையான சுப்ரத் தனது சமுதாய அந்தஸ்தைக் காட்டவும், ஆடம்பரமான வாழ்க்கை முறையைத் தொடரவும் பல்வேறு வங்கிகளிடம் இருந்து சுமார் 40 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளார். இந்தத் தொகைக்கு மாதந்தோறும் 55 ஆயிரம் ரூபாய் தவணையாகக் கட்ட வேண்டிய சூழலில் இருந்துள்ளார்.

தனது செலவுக்காக ஒவ்வொரு மாதமும் சுமார் 40 ஆயிரம் ரூபாய் வரை தந்தை விமீத் மினோச்சா வழங்கி வந்தாலும், அது சுப்ருத்தின் ஆடம்பரச் செலவுகளுக்குப் பற்றாக்குறையாகவே இருந்துள்ளது.

சுப்ருத்தின் மனைவி ஷாலு கூட தனது தந்தையிடம் இருந்து 14 லட்ச ரூபாயைப் பெற்று, கணவனின் கடனை அடைக்க உதவியுள்ளார். இருப்பினும் சுப்ருத்தின் பணத் தேவையும் கடனும் முழுமையாக தீரவில்லை.

விசாரணையில் தனது தந்தைக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும், அதனால் தனது தாயும் தந்தையும் பிரிந்து வாழ்வதாகவும் தெரிவித்துள்ளார்.

பிற்காலத்தில் தந்தை வேறொரு திருமணம் செய்து கொண்டால் குடும்பத்தின் கோடிக்கணக்கான சொத்து தனக்குக் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயமும் சந்தேகமும் தனக்கு இருந்ததாக சுப்ருத் காவல்துறையினரிடம் ஒப்புக் கொண்டுள்ளார்.

தந்தையின் சொத்து கைநழுவிப் போய்விடும் என்ற காரணத்தாலேயே தந்தையைக் கொலை செய்யும் அளவுக்கு சுப்ருத் சென்றுள்ளார்.

காவல்துறையின் தீவிர விசாரணையில், இந்தக் கொலைச் சதியில் மனைவி ஷாலுவுக்கு எந்தவித நேரடித் தொடர்பும் இல்லை என்பது உறுதியானது.

இதனால், அவரை இந்த வழக்கிலிருந்து விடுவித்து, அதற்கான மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யத் காவல்துறையினர் தயாராகி வருகின்றனர்

பண வெறியும் சொத்து மோகமும் ஒரு குடும்பத்தை எப்படி நிர்மூலமாக்கியுள்ளது என்பதை கான்பூர் மருந்து தொழிலதிபர் வினீத் மினோச்சா கொலை சம்பவம் உணர்த்துகிறது!

Tags: son killed fatherVineet MinochaRattan Orbit' apartment complexKalyanpur.uttar pradeshkanpurKanpur businessman murderKanpur businessman murder case
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

Related News

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

அட்டிகா கோல்டு நிறுவனம் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies