இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பாலக்கோட் தாக்குதல் முதல் ஆபரேஷன் சிந்துார் வரை, நாம் தெரிவிக்கும் முக்கிய செய்தி ஒன்றுதான்.அது என்னவென்றால் இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு நிச்சயம் பதிலடி உண்டு என தெரிவித்தார்.
பயங்கரவாதத்தை பதில் நடவடிக்கை மூலம் எதிர்கொள்வோம் என தெரிவித்துள்ள பிரதமர் மோடி, சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்பது வரலாற்று சாதனை என கூறினார்.
மேலும் அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் நடந்து 25 ஆண்டுகள் நிறைவடையும் இந்த சூழலில் துயரமுற்றிருக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
















