ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இடைத்தேர்தல் ஜனநாயகத்திற்கு எதிரானது என தெரிவித்தார்.
அரசு ஊழியர்கள் சலுகைக்காக போராடும் நிலையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு சலுகைக்குமேல் சலுகைகள் வழங்கப்படுவதாக அவர் சாடினார்.
“எஸ்.ஐ.ஆர் இல்லையென்றால் ராஜ்மோகன் அமைச்சராகவோ, விஜய் முதலமைச்சராகவோ இருந்திருக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சர்கள் கலந்துகொள்ளும் கூட்டங்களில் மின்வெட்டு ஏற்படுவதாகவும், இந்த விவகாரத்தில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
















