கோவை கோவில்பாளையம் பகுதியில் உயிரை பணயம் வைத்து போதைப்பொருள் கடத்தல்காரர்களை மடக்கி பிடித்த தலைமைக்காவலரின் செயல் பாராட்டுகளை குவித்து வருகிறது.
கோவில்பாளையம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கர்நாடக பதிவெண் கொண்ட கார் போலீசார் நிறுத்தியும் நிற்காமல் சென்றது.
இதனைத் தொடர்ந்து போலீசார் பின் தொடர்ந்த நிலையில் தலைமைக் காவலராக பணியாற்றும் வேல்முருகன் என்பவர் தனது உயிரை பணயம் வைத்து கடத்தல் வாகனத்தின் மீது தாவி குதித்து படுத்துக்கொண்டார்.
அவினாசி அருகே வந்த போது போலீசார் மடக்கி பிடித்து காரில் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ராஜஸ்தானை சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















