7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் - சிறப்பு தொகுப்பு!
Sep 27, 2026, 11:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 27, 2026, 11:18 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான ஈரானின் 7 நாள் போர் நிறுத்த முன்மொழிவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிராகரித்துள்ளார். மேலும் மீண்டும் ஈரான் மீது தாக்குதல்களைத் தீவிரப் படுத்த ட்ரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான காரணம் என்பது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.

ஐநா பொதுச்சபைக் கூட்டத்தின் இடையே ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான 7 நாள் திட்டத்தை முன்வைத்திருந்தார்.

அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையை விலக்கிக் கொள்ளவேண்டும்- ஈரான் எண்ணெய் ஏற்றுமதிக்கான பொருளாதாரத் தடைகளைத் தளர்த்த வேண்டும்-லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் போர் நிறுத்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பன போன்ற ஈரான் முன்வைத்த நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டால், மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் என்றும் அப்பாஸ் அராக்சி தெரிவித்திருந்தார்.

ஏற்கெனவே கத்தார் நாட்டின் மத்தியஸ்தர்கள் மூலம் இருநாடுகளும் நேர்மறையான மற்றும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன. எனினும், ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை கைவிடுவது உள்ளிட்ட அமெரிக்காவின் கடுமையான கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றும் என்பதில் அதிபர் ட்ரம்ப் தனிப்பட்ட முறையில் சந்தேகம் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஐநா சபைக் கூட்டத்தில் பேசிய அதிபர் ட்ரம்ப், நாட்டின் அரசியல் சூழல் தனது வெளியுறவுக் கொள்கையை பாதிக்காது என்றும், ஈரான் அணு ஆயுதம் பெறுவதை நிச்சயம் தடுப்பேன் என்றும் கூறியிருந்தார்.

ஈரானின் 7 நாள் போர் நிறுத்த முன்மொழிவை நிராகரித்த சில மணி நேரங்களிலேயே, தனது சமூக ஊடகப் பக்கத்தில் ஹார்முஸ் ஜலசந்தியை “ட்ரம்ப் ஜலசந்தி” என்று பெயரிடப்பட்ட புதிய வரைபடம் ஒன்றைப் பகிர்ந்து, அமெரிக்கா அங்கு முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில் தொடர்ச்சியான பொருளாதார நெருக்கடி ஈரானை தங்கள் நிபந்தனைகளுக்கு பணிய வைக்கும் என்று ட்ரம்ப் நம்புவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்த நிபந்தனைகளுக்கே ஒப்புதல் அளித்துள்ள ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரக் காவல் படை, எந்தவொரு புதிய உடன்பாடுகளையும் ஏற்க மறுத்து, நீண்டகாலப் போருக்குத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.

ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை அமெரிக்கா மீண்டும் தொடங்கும் என்று ட்ரம்ப் தனது அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

ஆயுத இருப்பைப் பாதுகாப்பதற்காக உடனடி போரைத் தவிர்க்கும் அதிபர் ட்ரம்ப், நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகே ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை மீண்டும் தீவிரப் படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே சவூதி ஆதரவு பெற்ற, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட யேமன் அரசின் மீது தங்கள் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ள ஹவுதிகள் சவூதி அரேபியா மீதும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

மெக்கா ஒப்பந்தத்தின் அடிப்படையில் துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகள், பாதுகாப்பு நிலைமையை மதிப்பிடுவதற்கும், உளவுத் தகவல்களைப் பகிர்தல், ராணுவ ஒருங்கிணைப்பு மற்றும் படை ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பு குறித்து விவாதிப்பதற்கும் ரியாத்தில் சந்தித்து பேசியுள்ளனர்.

Tags: us iran war 2026iran war liveiran us war newsus iran wariran us war news todayus iran war newsus israel iran warus iran war latestiran warwar iranIran-US war2026 iran wariran war newsiran war 2026us iran war liveu.s. iran war
Share
Tweet
SendShare
Previous Post

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

Related News

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

Load More

அண்மைச் செய்திகள்

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

அட்டிகா கோல்டு நிறுவனம் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

ஜெம் வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை – சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல்!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடிகர் தனுஷ் தரிசனம்!

ஆசிய விளையாட்டு போட்டி – கபடியில் தங்கம் வென்றது இந்திய மகளிர் அணி!

தெற்காசியா மீண்டும் ஆபத்தான நிலையை எட்டாமல் இருக்க, காஷ்மீர் விவகாரத்திற்கு தீர்வு காண வேண்டும் : ஷெபாஸ் ஷெரீப் மறைமுக மிரட்டல்!

ஆசிய விளையாட்டு போட்டி – கோலுன்றி உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்று தமிழக வீராங்கனை பரணிகா இளங்கோவன் சாதனை!

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக பாஸ் விற்பனையில் முறைகேடு – வினோஜ் பி.செல்வம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்புடைய வீடியோக்களை வெளியிட தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies