தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் - நயினார் நாகேந்திரன்!
Sep 27, 2026, 10:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 27, 2026, 10:28 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் ராகுலின் காந்தியின் நாடகம் அம்பலமாகி வருவதாக தமிழக பாஜக மாநில தலைவர்  நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது: “தொடர் தேர்தல் தோல்விகளால் விரக்தியின் விளிம்பில் நிற்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், எதிர்க்கட்சிகளும் காழ்ப்புணர்ச்சியால் இந்திய ஜனநாயகக் கட்டமைப்பு மற்றும் அரசியல் சாசன அமைப்புகள் மீது அவதூறுகளை வாரி இறைத்து வருகின்றனர்.

SIR விவகாரத்தில் தேர்தல் ஆணையர்களில் இருவர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் தன்னிச்சையாக முடிவெடுத்ததாகவும் பரப்பி வந்த அவதூறுகளை உடைக்கும் விதமாக தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) தொடர்பான அனைத்து முக்கிய உத்தரவுகளும், கால அட்டவணைகளும் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் என மூன்று ஆணையர்களின் ஒருமனதான (Unanimous) ஒத்த முடிவின்படியே எடுக்கப்பட்டவை என்பது ஆணித்தரமாகத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த SIR நடைமுறைகளையும் படிவம் 6 உறுதிமொழியையும் நாட்டின் மாண்புமிகு உச்ச நீதிமன்றமே உறுதிசெய்து சட்டப்பூர்வ அங்கீகாரம் அளித்துள்ள நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் ஜனநாயக அமைப்புகளையும் கொச்சைப்படுத்தும் ராகுல் காந்தியின் பொய் மூட்டைகள் சுக்குநூறாக உடைந்து போயுள்ளன.

தேர்தல் நடைமுறைகளில் முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் எடுத்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளைப் பாராட்டக்கூட காங்கிரஸுக்கு மனமில்லை. வாக்காளர்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் இந்த உன்னத சீர்திருத்தங்களைத் திசைதிருப்ப நினைக்கும் எதிர்க்கட்சிகளின் நாசகார அரசியலை நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்;

இந்திய அரசமைப்புச் சட்டத்தையும் தன்னாட்சி நிறுவனங்களையும் திட்டமிட்டு இழிவுபடுத்த முயலும் ராகுல் காந்தியின் அரசியல் பித்தலாட்டங்களுக்கு நாட்டு மக்கள் மீண்டும் ஒருமுறை தகுந்த பாடம் புகட்டுவார்கள் என நயினார் கூறியுள்ளார்.

Tags: Special Intensive Revisionrahul gandhiElection commissionChief Election CommissionerTamil Nadu BJP state president Nainar Nagendran
Share
Tweet
SendShare
Previous Post

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

Related News

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

அட்டிகா கோல்டு நிறுவனம் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

ஜெம் வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை – சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல்!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடிகர் தனுஷ் தரிசனம்!

ஆசிய விளையாட்டு போட்டி – கபடியில் தங்கம் வென்றது இந்திய மகளிர் அணி!

தெற்காசியா மீண்டும் ஆபத்தான நிலையை எட்டாமல் இருக்க, காஷ்மீர் விவகாரத்திற்கு தீர்வு காண வேண்டும் : ஷெபாஸ் ஷெரீப் மறைமுக மிரட்டல்!

ஆசிய விளையாட்டு போட்டி – கோலுன்றி உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்று தமிழக வீராங்கனை பரணிகா இளங்கோவன் சாதனை!

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக பாஸ் விற்பனையில் முறைகேடு – வினோஜ் பி.செல்வம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்புடைய வீடியோக்களை வெளியிட தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஜெம் வீரமணியின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு – போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies