ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை தமிழக அரசு திரும்ப பெற்றது.
சட்டம் ஒழுங்கு தொடர்பான தகவல்களை பெறுவதில் கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக தெரிவித்த தமிழக அரசு, விசாரணை ஆணையம் தொடர்பான நியமனங்கள், காவல் மரணம் தொடர்பான அறிக்கை, வழக்கின் விசாரணை நிலை உள்ளிட்டவை குறித்த தகவல்களை வழங்க முடியாது என அறிவித்திருந்தது.
இதனால் மக்களவை, மாநிலங்களவையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு உரிய தகவல்களை பெற முடியாத நிலையும் ஏற்பட்டது. அரசின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். எதிர்ப்புகள் வலுவானதை உணர்ந்த தமிழக அரசு சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விதிக்கப்பட்ட விலக்கை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
















