சென்னையில் தி.நகர் உட்பட 2 இடங்களில் அட்டிகா கோல்டு நிறுவனத்தில் 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அட்டிகா கோல்டு நிறுவனத்திற்கு தமிழகம், கேரளம், ஆந்திர உள்ளிட்ட மாநிலங்களில் கிளைகள் உள்ளன. இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு மற்றும் நிதிமோசடி செய்ததாக புகார் எழுந்ததால் நாடு முழுவதும் உள்ள கிளைகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் 30 இடங்களில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், சென்னையில் தி.நகர் உட்பட இரண்டு இடங்களில் 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
வங்கி இருப்பு, பணப் பரிமாற்றம் உள்ளிட்டவை குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
















