தனியார் ஒப்பந்த பேருந்துகள் இயக்கம் - அரசு பேருந்துகளில் செல்ல ஆர்வம் காட்டாத பயணிகள்!
Nov 10, 2026, 07:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தனியார் ஒப்பந்த பேருந்துகள் இயக்கம் – அரசு பேருந்துகளில் செல்ல ஆர்வம் காட்டாத பயணிகள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 10, 2026, 07:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சிவகங்கை பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்குச் செல்ல 20-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டதுடன், அரசு சார்பிலும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இருப்பினும், பேருந்துகளில் பயணிக்க போதிய பயணிகள் இல்லாததால் பேருந்து நிலையம் பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்ட நிலையில், சென்னையில் தங்கி வேலை பார்த்து வரும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றிருந்தனர்.

தீபாவளி விடுமுறை முடிந்து  மீண்டும் சென்னை திரும்புவதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
குறிப்பாக மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சென்னை செல்வதற்காக ஏராளமானோர் பேருந்து நிலையங்களில் குவிந்தனர்.  . இதனால் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகரித்தது.

ஆனால், சிவகங்கை பேருந்து நிலையத்தில் மட்டும் இதற்கு முற்றிலும் மாறுபட்ட சூழல் நிலவியது. . சென்னைக்குச் செல்ல 20-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் இயக்கப்படுவதுடன், அரசு சார்பிலும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இருப்பினும், பேருந்துகளில் பயணிக்க போதிய பயணிகள் இல்லாததால் பேருந்து நிலையம் பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
பொதுவாக தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் சென்னைக்குச் செல்லும் தனியார் பேருந்துகளில் பயணக் கட்டணம் ரூ.1,500 முதல் ரூ.2,500 வரை வசூலிக்கப்படுவது வழக்கம்.

ஆனால், தற்போது சாதாரண கட்டணமாக சுமார் ரூ.900 மட்டுமே வசூலிக்கப்படும் நிலையிலும், பேருந்துகளில் பயணிக்க மக்கள் ஆர்வம் காட்டாதது தனியார் பேருந்து நடத்துநர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற மாவட்டங்களில் தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் பயணிகளால் பேருந்து நிலையங்கள் பரபரப்பாகக் காணப்படும் நிலையில், சிவகங்கையில் மட்டும் பயணிகள் வருகை குறைந்து பேருந்துகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோல் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்கு தனியார் ஒப்பந்த பேருந்துகளை இயக்கியதால், அரசு பேருந்துகளில் செல்ல பயணிகள் ஆர்வம் காட்டவில்லை.

இதனால், அரசு பேருந்துகள், பயணிகள் இல்லாமல் பலமணி நேரம் காத்துக் கிடந்தன. பயணிகள் பெருமளவில் பயணிக்காததால் அரசுக்கு ஒரு பேருந்துக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படும் என ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.

Tags: private special busMaduraisivagangadeepavali 2026deepawali 20262026 deepawalideepavali date 2026deepawali deepavali light up 2026govenment special bus
Share
Tweet
SendShare
Previous Post

தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள் – செங்கல்பட்டு அருகே போக்குவரத்து நெரிசல்!

Related News

தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள் – செங்கல்பட்டு அருகே போக்குவரத்து நெரிசல்!

உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு – போரை நிறுத்த இந்தியா பங்களிக்க தயாராக உள்ளதாக உறுதி!

வாக்குறுதிகளை நிறைவேற்றுமா ஜனநாயக கட்சி? : அதிபர் ட்ரம்ப் ஆட்சியில் காத்திருக்கும் சவால்கள் – சிறப்பு தொகுப்பு!

நாட்டில் குழப்பத்தை உருவாக்க நினைப்பவர்களுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைய வேண்டும் – தர்மேந்திர பிரதான்

துணை சபாநாயகர் மிரட்டியது உண்மைதான் – பாதிக்கப்பட்டவர் ஒப்புதல்!

தென்காசி புளியரையில் காட்டு யானை தாக்கியதில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் ஒப்பந்த பேருந்துகள் இயக்கம் – அரசு பேருந்துகளில் செல்ல ஆர்வம் காட்டாத பயணிகள்!

போதைப்பொருள் விவகாரம் – பிக் பாஸ் பிரபலம் இல்லத்தில் காவல்துறை சோதனை!

ஈரோடு ஜவுளிக்கடைகளில் 50 சதவீத தள்ளுபடி விற்பனை – அதிகாலை முதல் காத்திருந்த வாடிக்கையாளர்கள்!

தேனி சிறப்பு சார்பு ஆய்வாளர் கொலை வழக்கு – 3 பேர் கைது!

புற்றுநோய் சிகிச்சை மருந்து விலை குறைப்பு – இன்று முதல் அமல்!

இன்றைய தங்கம் விலை!

தீபாவளியை மகிழ்ச்சியின் ஈத் என குறிப்பிட்ட மல்லிகார்ஜுன கார்கே – பாஜக கண்டனம்!

சென்னையில் விற்பனையாளர் மீது தாக்குதல் – இரவில் டாஸ்மாக் கடைகள் அடைப்பு!

சர்வதேச சட்டங்களை மீறும் நாடுகளுக்கு நிதி, ராணுவ உதவியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – அமெரிக்க செனட்டர் அப்துல் எல் சயீத் வலியுறுத்தல்!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஐப்பசி அமாவாசை ஊஞ்சல் உற்சவம் கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies