நடிகரும், பிக் பாஸ் பிரபலமுமான பாலாஜி முருகதாஸ் வீட்டில் போதைப்பொருள் இருப்பதாக வந்த புகாரின் பேரில் போலீசார் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரவாயல் அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் பாலாஜி முருகதாஸ் வசித்து வருகிறார். அவரது வீட்டில் போதைப்பொருள் பயன்படுத்துவதாக அதே குடியிருப்பைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில், திருவேற்காடு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாலாஜி முருகதாஸ், சோதனைக்கான முறையான ஆவணங்கள் இல்லாமல் வீட்டில் சோதனை நடத்தியதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆனால், சோதனையில் போதைப்பொருள் எதுவும் சிக்கவில்லை என்றும், காலி மதுபாட்டில்கள் மட்டுமே இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து பாலாஜி முருகதாஸ் சமூக வலைதளத்தில் போலீசாருக்கு எதிராகப் பதிவிட்டுள்ளார்.
















