தீபாவளி பட்டாசுகள் வேண்டாம்; பறவைகளே முக்கியம்...! நெகிழ வைக்கும் கிராமம் - சிறப்பு தொகுப்பு!
Nov 8, 2026, 01:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தீபாவளி பட்டாசுகள் வேண்டாம்; பறவைகளே முக்கியம்…! நெகிழ வைக்கும் கிராமம் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 8, 2026, 01:18 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தீபாவளியை கொண்டாட நாடே தயாராகி வரும் நிலையில் பட்டாசு சத்தங்களும் கேட்கத் தொடங்கிவிட்டன. ஆனால் தமிழகத்திலோ ஒரு கிராமத்தில் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை தீபாவளிக்கு முன்பும் தீபாவளியன்றும் பட்டாசுகளே வெடிப்பதில்லை என்பது ஆச்சரியம் தானே..! அப்படி பட்டாசுகள் வெடிப்பதை தவிர்ப்பது ஏன்? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்…

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ளது கொள்ளுக்குடிப்பட்டி. இந்த கிராமத்தில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அனைவருமே விவசாயத்தை மட்டுமே பிரதான தொழிலாக செய்து வரும் நிலையில் அந்த விவசாயத்திற்கு நீராதாரமாக திகழும் கண்மாய், கிராமத்தின் வடமேற்கு பகுதியில் சுமார் 17 ஹெக்டர் அளவில் அமைந்துள்ளது.

இந்த கண்மாய்க்குள் வளர்ந்துள்ள மரங்களில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் சில வெளிநாட்டு பறவைகள் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்தன. அதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வரக்கூடிய பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. அந்த கண்மாயை மட்டுமின்றி 3 கண்மாய்களை சேர்த்து 38 ஹெக்டர் நிலத்தினை வனத்துறை கைப்பற்றியது. கடந்த 1977 ஆம் ஆண்டு வேட்டங்குடி பறவைகள் சரணாலயமாக அறிவித்தது.

பர்மா, மலேசியா, கொரியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், மத்திய தென் ஆப்பிரிக்கா, நார்வே உள்ளிட்ட நாடுகளில் இருந்து நைட் ஹெரான், கிரே ஹெரான், கேட்டில் ஈக்ரேட், பெயிண்டட் ஸ்டார்க், வொயிட் ஐபீஸ், ப்ளாக் ஐபீஸ், ஸ்பூன் பில்,ஸ்பாட் பில் உள்ளிட்ட பறவைகள் வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்திற்கு படையெடுத்து வருகின்றன. நவம்பர் மாதம் துவங்கி மார்ச் மாதம் வரை தங்கி இனப்பெருக்கத்தை முடித்துவிட்டு சொந்த நாட்டிற்கு திரும்புகின்றன. இங்கு வந்து செல்லும் பறவைகளை வைத்தே கிராம மக்கள் விவசாயத்தை கணிக்கின்றனர். எனவே பறவைகளையும் தங்களது உறவுகளாகவே கருதுகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் பறவைகளின் எண்ணிக்கை உயர்ந்து தற்சமயம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் ஆண்டு தோறும் வந்து செல்கின்றன. எனவேதான் பறவைகளை அச்சுறுத்தும் எந்த செயல்களையும் கொள்ளுக்குடிப்பட்டி கிராம மக்கள் மேற்கொள்வதில்லை. அதிக ஒலி எழுப்பும் எந்த ஒரு செயலையும் தவிர்ப்பதுடன் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகளே வெடிப்பதில்லை.

தீபாவளி மட்டுமல்ல…. கிராமத்தில் நடைபெறும் சுப, துக்க நிகழ்ச்சிகளுக்கு கூட பட்டாசுகள் வெடிப்பதில்லை. தீபாவளியை புத்தாடை மற்றும் இனிப்புடன் முடித்துக்கொள்கின்றனர். இந்த பழக்கம் 3 ஆவது தலைமுறையாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

பறவைகளுக்காக தமது கொண்டாட்டத்தின் ஒரு பகுதியையே தியாகம் செய்யும் கிராம மக்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றனர். சகல உயிர்களையும் நேசிக்க வேண்டும் என்பதையே அவர்களின் செயல் சத்தமில்லாமல் உணர்த்திக் கொண்டிருக்கிறது.

Tags: KollukkudipattiTirupattur.Diwali celebrationdeepavali 2026deepawali 20262026 deepawalideepavali date 2026deepawali deepavali light up 2026firecrackers sound
Share
Tweet
SendShare
Previous Post

போயஸ் கார்டன் இல்லம் முன்பு திரண்ட ரசிகர்கள் – நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்தை பரிமாறிக்கொண்ட ரஜினிகாந்த்!

Related News

போயஸ் கார்டன் இல்லம் முன்பு திரண்ட ரசிகர்கள் – நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்தை பரிமாறிக்கொண்ட ரஜினிகாந்த்!

தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊர் புறப்பட்ட வட மாநில தொழிலாளர்கள் – திருப்பூர் ரயில் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்!

ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு சிறுமி பாலியல் புகார்!

சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள் – செங்கல்பட்டு அருகே சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்த வாகனங்கள்!

100-வது வயதில் அடியெடுத்து வைக்கும் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி – பிரதமர் மோடி வாழ்த்து!

தீபாவளி பண்டிகை : பிரதமர் மோடி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளி பட்டாசுகள் வேண்டாம்; பறவைகளே முக்கியம்…! நெகிழ வைக்கும் கிராமம் – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!

தீபாவளி பண்டிகை ஒவ்வொரு வீட்டிலும் மகிழ்ச்சி, செழிப்பை கொண்டு வரட்டும் – பிரதமர் மோடி

அமெரிக்க இடைக்கால தேர்தலில் உடைந்து நொறுங்கிய ட்ரம்ப்பின் பிம்பம் – சிறப்பு தொகுப்பு!

புத்தக கொள்முதலில் ஊழல் செய்த திமுக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – அமைச்சர் ராஜ்மோகன்

அயோத்தியில் 10-வது தீபோற்சவம் கோலாகல தொடக்கம்!

2000 கோடி செலவில் வெற்றி மடிக்கணினி திட்டத்தை செயல்படுத்த முதல்வர் உத்தரவு!

தமிழகம் ஒப்புதலின்றி மேகதாது அணை கட்ட சட்டப்பூர்வ அனுமதி வழங்கக்கூடாது – பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!

மணல் குவாரி முறைகேடு – துரைமுருகன் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்ப லஞ்ச ஒழிப்புத்துறை திட்டம்!

கோவை அறிவுலக போலி நூல்கள் விவகாரம் தொடர்பாக முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies