புத்தக கொள்முதல் ஊழல் குறித்து நீதி விசாரணை நடைபெற உள்ளதாகவும், ஊழல் செய்ததற்காக, திமுக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அரசின் அழுத்தம் காரணமாக குப்பை போன்ற புத்தகங்களை குழு பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்தார்.
அகல்விளக்கு பதிப்பகத்திற்கு கடந்த மாரச் மாதம் பேமென்ட் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், அந்த புத்தகங்களை ஒப்படைத்து பணத்தை திரும்ப பெறுவோம் என்றும் அவர் கூறினார்.
குப்பை போன்ற புத்தகங்களை திமுகவினர் தங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு வழங்குவார்களா? என வினவிய அவர், “புத்தக கொள்முதல் ஊழல் குறித்து நீதி விசாரணை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
















