தொடர்ந்து அதிகரிக்கும் இந்திய ரூபாயின் மதிப்பு : பங்கு சந்தையிலும் ஏற்றம் : காரணம் என்ன? - சிறப்பு தொகுப்பு!
Nov 7, 2026, 01:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொடர்ந்து அதிகரிக்கும் இந்திய ரூபாயின் மதிப்பு : பங்கு சந்தையிலும் ஏற்றம் : காரணம் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 7, 2026, 01:44 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்க இடைக்காலத் தேர்தலின் முடிவுகள் காரணமாக கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் முக்கிய பங்குச் சந்தைக் குறியீடுகள் உயர்ந்துள்ளன. ரூபாயின் மதிப்பும் உயர்ந்து வருகிறது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

அமெரிக்க இடைத்தேர்தலில் நாட்டின் இரு சபைகளையும் கைப்பற்றியுள்ள ஜனநாயகக் கட்சியின் அபரிதமான வெற்றியால் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீதான கட்டுப்பாட்டை அதிபர் ட்ரம்ப் தலைமையிலான குடியரசு கட்சி முழுமையாக இழந்துள்ளது.

இந்த தேர்தல் முடிவுகள் ஈரான் போர் குறித்த முதலீட்டாளர்களின் பார்வையைத் தலைகீழாக மாற்றியுள்ளது. இது, ஈரானுடனான போரை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீது அழுத்தம் கொடுக்கக்கூடும் என்று கருதப் படுகிறது. இது கச்சா எண்ணெய் விலை குறையக்கூடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி நாடான இந்தியாவின் பங்குகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீண்டும் முதலீடு செய்யத் தொடங்கியிருப்பது சந்தைக்கு கூடுதல் ஊக்கத்தை அளித்துள்ளது.

கடந்த புதன்கிழமை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் 7,284 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து நான்காவது நாளாக இந்தியப் பங்குகளில் முதலீடு செய்துள்ளதையே இது காட்டுகிறது.

கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு கடந்த வியாழக்கிழமை வர்த்தகத் தொடக்கத்தில், பங்குச் சந்தையில் நிஃப்டி (Nifty) மற்றும் சென்செக்ஸ் (Sensex) குறியீடுகள் உயர்ந்துள்ளன. 16 முக்கியத் துறைசார் குறியீடுகளில் பதினான்கு குறியீடுகள் உயர்வாக வர்த்தகமாகியுள்ளன. நிஃப்டி ஸ்மால்கேப் 100 குறியீடுகளும் மற்றும் நிஃப்டி மிட்கேப் 100 குறியீடுகளும் தலா 1 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளன.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குகளை வாங்கும் போது டாலர் வரவைக் கொண்டு வரும் நிலையில் உள்நாட்டுச் சந்தையில் அந்நியச் செலாவணி விநியோகத்தை அதிகரித்து, ரூபாய் மதிப்பு கூடியுள்ளது.

அதே நாளில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு சுமார் 93.50 டாலராகக் குறைந்துள்ளது. முந்தைய அமர்வில் ஏற்பட்ட 8.7 சதவீத கடுமையான வீழ்ச்சியைத் தொடர்ந்து, மேலும் 1 சதவீத சரிவு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே ஆறு முக்கிய நாணயங்களைக் கொண்ட தொகுப்பிற்கு எதிராக அமெரிக்க டாலரின் வலிமையை அளவிடும் ‘டாலர் குறியீடு’ (Dollar Index), 0.34 சதவீதம் சரிந்து 101.22 என்ற அளவில் வர்த்தகமாகியுள்ளது.

இதன் விளைவாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து ஐந்தாவது வர்த்தக அமர்வாக 29 பைசா உயர்ந்து டாலருக்கு நிகராக 94.35 முதல் 94.42 என்ற வலிமையான நிலைக்கு உயர்ந்துள்ளது.

முன்னதாக Jio Platforms-ன் சுமார் 30,213 கோடி மதிப்பிலான IPO வெற்றி இந்திய ரூபாயின் மதிப்பைத் தொடர்ந்து உயர்த்தியிருந்தது.

மேலும் எண்ணெய் நிறுவனங்களின் டாலர் தேவையை நேரடியாக சந்தைக்குக் கொண்டு வராமல் மாற்றுப் பாதைகளில் கையாளுவது போன்ற மத்திய ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வரும் கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் ரூபாயின் ஸ்திரத்தன்மைக்கு வலிமை சேர்த்துள்ளன

இவையெல்லாம் இந்தியாவின் இறக்குமதி சார்ந்த தொழில்களுக்கும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் தற்போதைய சூழலில் பெரும் உதவிகரமாக இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்

Tags: iran us war news todayus iran war newsrussia ukraine war latestrussia ukraine war livestock marketRussia Ukraine warpresident trumpIran-US warUS midterm electionsiran us war newsus iran war
Share
Tweet
SendShare
Previous Post

ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் குழு கலைப்பு – தமிழக அரசு அறிவிப்பு!

Related News

ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் குழு கலைப்பு – தமிழக அரசு அறிவிப்பு!

தீபாவளி பண்டிகை ஒவ்வொரு வீட்டிலும் மகிழ்ச்சி, செழிப்பை கொண்டு வரட்டும் – பிரதமர் மோடி

பல மணி நேரம் காத்திருந்த பயணிகள்;பேருந்துகள் இல்லாததால் அதிகாரிகளுடன் வாக்குவாதம்

தீபாவளி பண்டிகை;சிறப்பு பேருந்துகளில் 2.59 லட்சம் பேர் பயணம்

தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள்; நிரம்பி வழியும் பேருந்து நிலையம்

அறிவுலக நூலகத்திற்கு போலி நூல்கள்; சீமான் கண்டனம்

Load More

அண்மைச் செய்திகள்

தொடர்ந்து அதிகரிக்கும் இந்திய ரூபாயின் மதிப்பு : பங்கு சந்தையிலும் ஏற்றம் : காரணம் என்ன? – சிறப்பு தொகுப்பு!

கோடிக்கணக்கில் முறைகேடு; எழுத்தாளர் குற்றச்சாட்டு

தலை தீபாவளியும், மண் மணம் மாறாத முறுக்கு, அதிரசமும் – ஸ்பெஷல் பலகாரங்கள் தொகுப்பு!

ஈரான் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த அமெரிக்க திட்டம்?: கதிரியக்க பாதிப்பு அபாயம் – சிறப்பு தொகுப்பு!

கோவை நூலகத்தை ஊழல் உலகமாக மாற்றிய திமுக – முதலமைச்சர் விஜய் விமர்சனம்!

அன்பில் மகேஷ் நீதிமன்ற காவல் நவம்பர் 18 வரை நீட்டிப்பு – ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

தலைமைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் – முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை!

இன்றைய தங்கம் விலை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ அறிவிப்பு!

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர் : 5-வது முறையாக இந்தியா சாம்பியன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies