மணல் குவாரி முறைகேடு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை திட்டமிட்டுள்ளது.
திமுக ஆட்சியில் துரைமுருகன் அமைச்சராக இருந்த 2021 – 2024ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 28 மணல் குவாரிகளுக்கு வெளிப்படையான டெண்டர் முறையை பின்பற்றாமல் ஒப்பந்தங்கள் வழங்கியதாகவும்,
அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக மணல் எடுத்ததாகவும், போலி அனுமதி சீட்டுகள் தயாரித்து பயன்படுத்தியதாகவும் புகார் எழுந்துள்ளது.
28 குவாரிகளில் 4 குவாரிகளில் சட்டவிரோதமாக மணல் எடுத்து அரசுக்கு சுமார் ஆயிரத்து 427 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நேற்று சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட 34 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் வழக்கு தொடர்பான 825 ஆவணங்கள், 11 மின்னணு சாதனங்கள் மற்றும் 3 வங்கி லாக்கர் சாவிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்கில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
















