தமிழகம் ஒப்புதலின்றி மேகதாது அணை கட்ட சட்டப்பூர்வ அனுமதி வழங்கக்கூடாது - பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!
Nov 7, 2026, 05:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகம் ஒப்புதலின்றி மேகதாது அணை கட்ட சட்டப்பூர்வ அனுமதி வழங்கக்கூடாது – பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 7, 2026, 05:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட உத்தேசித்துள்ள இடத்தை ஒன்றிய அரசு அதிகாரிகள் பார்வையிட்டது சரியல்ல என்று கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டின் ஒப்புதலின்றி மேகதாது அணை கட்டுவதற்கு பிரதமர் மோடி சட்டப்பூர்வ அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தி உள்ளார்.

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் எழுதியுள்ள கடிதத்தில், கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே 67.16 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட மேகதாது அணையைக் கட்ட திட்டமிட்டுள்ளதை சுட்டிக்காட்டி உள்ளார்.

இந்த அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய காவிரி நீர் பாதிக்கப்படுவதுடன், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் எனவும் முதலமைச்சர் விஜய் கவலை தெரிவித்துள்ளார்.

கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட உத்தேசித்துள்ள இடத்தை மத்திய அரசு அதிகாரிகள் பார்வையிட்டது சரியான நடவடிக்கை அல்ல என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பைக் கருத்தில் கொண்டு, மேகதாது அணை திட்டத்திற்கு நேரடி தள ஆய்வுகள், தொழில்நுட்ப மதிப்பீடுகள் செய்வதையோ, சட்டப்பூர்வ அனுமதி வழங்குவதையோ தவிர்க்குமாறு ஜல் சக்தி அமைச்சகம், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகங்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜல் சக்தி அமைச்சகத்தால் சமீபத்தில் நேரடி தள ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தால், அதனால் ஏற்படும் தொடர் நிர்வாக நடவடிக்கைகளை ஒத்திவைக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய் வலியுறுத்தி உள்ளார்.

தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை திட்டத்திற்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்கக்கூடாது எனவும் பிரதமர் மோடியை கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags: Mekedatu dam project.cm vijaypm modi jipm modi delhipm modi songpm modi aartiPM Modipm modi livepm modi news
Share
Tweet
SendShare
Previous Post

மணல் குவாரி முறைகேடு – துரைமுருகன் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்ப லஞ்ச ஒழிப்புத்துறை திட்டம்!

Related News

மணல் குவாரி முறைகேடு – துரைமுருகன் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்ப லஞ்ச ஒழிப்புத்துறை திட்டம்!

கோவை அறிவுலக போலி நூல்கள் விவகாரம் தொடர்பாக முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

தொடர்ந்து அதிகரிக்கும் இந்திய ரூபாயின் மதிப்பு : பங்கு சந்தையிலும் ஏற்றம் : காரணம் என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் குழு கலைப்பு – தமிழக அரசு அறிவிப்பு!

தீபாவளி பண்டிகை ஒவ்வொரு வீட்டிலும் மகிழ்ச்சி, செழிப்பை கொண்டு வரட்டும் – பிரதமர் மோடி

பல மணி நேரம் காத்திருந்த பயணிகள்;பேருந்துகள் இல்லாததால் அதிகாரிகளுடன் வாக்குவாதம்

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகம் ஒப்புதலின்றி மேகதாது அணை கட்ட சட்டப்பூர்வ அனுமதி வழங்கக்கூடாது – பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!

தீபாவளி பண்டிகை;சிறப்பு பேருந்துகளில் 2.59 லட்சம் பேர் பயணம்

தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள்; நிரம்பி வழியும் பேருந்து நிலையம்

அறிவுலக நூலகத்திற்கு போலி நூல்கள்; சீமான் கண்டனம்

கோடிக்கணக்கில் முறைகேடு; எழுத்தாளர் குற்றச்சாட்டு

தலை தீபாவளியும், மண் மணம் மாறாத முறுக்கு, அதிரசமும் – ஸ்பெஷல் பலகாரங்கள் தொகுப்பு!

ஈரான் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த அமெரிக்க திட்டம்?: கதிரியக்க பாதிப்பு அபாயம் – சிறப்பு தொகுப்பு!

கோவை நூலகத்தை ஊழல் உலகமாக மாற்றிய திமுக – முதலமைச்சர் விஜய் விமர்சனம்!

அன்பில் மகேஷ் நீதிமன்ற காவல் நவம்பர் 18 வரை நீட்டிப்பு – ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

தலைமைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் – முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies