உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 10-வது ஆண்டாக நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க பிரம்மாண்ட ‘தீபோற்சவம்’ கொண்டாட்டங்கள், ராமாயணக் காட்சிகளை சித்தரிக்கும் கண்கவர் ஊர்வலத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
அயோத்தியில் தீபாவளி பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் நடத்தப்படும் பிரம்மாண்ட தீபோற்சவ விழாவின் 10-வது பதிப்பு தொடங்கியது.
இதன் தொடக்கமாக, ராமாயண காப்பிய நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் மற்றும் வண்ணமயமான கலாச்சார ஊர்வலத்தை உத்தரப்பிரதேச சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் ஜெயவீர் சிங் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
















