அமெரிக்க இடைக்கால தேர்தலில் உடைந்து நொறுங்கிய ட்ரம்ப்பின் பிம்பம் - சிறப்பு தொகுப்பு!
Nov 7, 2026, 09:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்க இடைக்கால தேர்தலில் உடைந்து நொறுங்கிய ட்ரம்ப்பின் பிம்பம் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 7, 2026, 08:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி அடைந்துள்ள வரலாற்றுத் தோல்விக்கு அதிபர் ட்ரம்ப்பின் அகந்தையும், தவறான முடிவுகளுமே காரணம் என்று கூறப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

வழக்கமாகவே, அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களில் அதிபரின் கட்சி தோல்வியைச் சந்திப்பதுதான் மரபு.

1946-ஆம் ஆண்டு முதல் நடந்த 20 இடைக்காலத் தேர்தல்களில், 18-ல் அதிபரின் கட்சி சராசரியாக சுமார் 26 இடங்களை இழந்துள்ளன.

ஜார்ஜ் டபிள்யூ. புஷ் அதிபராக இருந்த 2006-ல் பிரதிநிதிகள் சபையில் 30 இடங்களை இழந்தார். பராக் ஒபாமா அதிபராக இருந்த 2010-ல் 63 இடங்களை இழந்தார். தனது முதல் பதவிக்காலத்தில், 2018 -ல் 41 இடங்களை ட்ரம்ப்பின் குடியரசு கட்சி இழந்தது. எனவே, இந்த ஆண்டு எதிர்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் பிரதிநிதிகள் சபையைக் கைப்பற்றி, சுமார் 30 இடங்களைக் கூடுதலாகப் பெற்றுள்ளனர். இது ஒன்றும் பெரிய ஆச்சரியமல்ல.

ஆனால் 94 ஆண்டுகளுக்குப் பிறகு கன்சாஸிலும், 34 ஆண்டுகளுக்குப் பிறகு டெக்சாஸிலும், 28 ஆண்டுகளுக்குப் பிறகு தென் கரோலினாவிலும் வெற்றி பெற்றுள்ள ஜனநாயகக் கட்சி, ஓஹியோ, அயோவா மற்றும் வட கரோலினா ஆகிய மாநிலங்களிலும் வெற்றிருப்பதுதான் ஆச்சரியமானதாகும். இவையெல்லாம் ஜனநாயக கட்சியினரே எதிர்பார்க்காத வெற்றியாகும்.

குடியரசுக் கட்சியின் பாரம்பரியக் கோட்டைகளான இந்தத் தொகுதிகளில் ட்ரம்ப், தனது தனிப்பட்ட விசுவாசத்தின் அடிப்படையில் நிறுத்திய பலவீனமான மற்றும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய வேட்பாளர்களை மக்கள் முற்றிலுமாக நிராகரித்துள்ளனர்.

உதாரணமாக டெக்சாஸில் ட்ரம்ப் தீவிர ஆதரவு அளித்த மாநில அரசு வழக்கறிஞர் கென் பாக்ஸ்டன் மீது ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. அதேபோல் தென் கரோலினாவில், கடந்த ஜூலை மாதம் மறைந்த செனட்டர் லிண்ட்சே கிரஹாமின் சகோதரி டார்லின் கிரஹாமுக்கு ட்ரம்ப் ஆதரவளித்த நிலையில் அங்கும் ஜனநாயக கட்சி எளிதாக வெற்றிபெற்றுள்ளது.

விவசாயம் சார்ந்த கன்சாஸில், பதவியில் இருந்த ரோஜர் மார்ஷல் ட்ரம்பின் நிர்வாகக் கொள்கைகளைத் தீவிரமாக ஆதரித்ததே அவரது தோல்விக்குக் காரணமாக அமைந்துவிட்டது.

மொத்தத்தில் இந்தத் தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் ட்ரம்பிடமிருந்து விலகி, உள்ளூர் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளித்திருந்தாலே வெற்றி பெற்றிருக்க முடியும். அதனால் குடியரசு கட்சியினரின் தோல்விக்கு ட்ரம்பே முதன்மையான காரணம் என்று கூறப்படுகிறது.

ஈரான் போரினால் மிகக் கடுமையாக உயர்ந்த எரிபொருள் விலை, கடுமையான விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் அமெரிக்க வாக்காளர்களிடையே ட்ரம்ப் மீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உள்நாட்டு மக்கள் பிரச்சனைகளைக் கண்டு கொள்ளாமல்,இந்தியா பாகிஸ்தான் போர் உட்பட எட்டுப் போர்களை நிறுத்தினேன் என்றும் தற்பெருமை பேசிய வந்த ட்ரம்ப்பின் அகந்தைக்கு, அமெரிக்க வாக்காளர்கள் அளித்த நேரடித் தீர்ப்பாகவே இந்த தேர்தல் முடிவுகள் பார்க்கப்படுகிறது.

ட்ரம்பின் தலைமையின் கீழ் பாரம்பரியமான செல்வாக்கு மாகாணங்களையும் இழந்துள்ள குடியரசு கட்சியும், ‘அரசியல் ரீதியாக யாராலும் வீழ்த்த முடியாதவர்கள்’ என்ற பிம்பத்தை ஏற்படுத்திய MAGA இயக்கமும் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.

சுமார் பத்தாண்டுகளாக ட்ரம்பின் ஆதிக்கத்தில் தனிநபர் விசுவாசத்தாலும், ஒருவித வழிபாட்டு கலாச்சாரத்தாலும் கட்டுண்டு கிடந்த குடியரசுக் கட்சிக்குளேயே இனி கருத்து மோதல்கள் உருவாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

சொல்லப்போனால், ட்ரம்ப் எனும் பிம்பம் ஒரு பாதுகாப்புக் கவசமாக இருப்பதற்குப் பதிலாக, ஒரு அரசியல் சுமையாகவே குடியரசு கட்சிக்கு மாறியுள்ளது.

Tags: us iran wariran us war news todayus iran war newsus mid term electionGeorge W. Bush’s presidencyTrumpRepublican PartyUS President Trumppresident trumpIran-US wariran us war news
Share
Tweet
SendShare
Previous Post

புத்தக கொள்முதலில் ஊழல் செய்த திமுக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – அமைச்சர் ராஜ்மோகன்

Next Post

தீபாவளி பண்டிகை ஒவ்வொரு வீட்டிலும் மகிழ்ச்சி, செழிப்பை கொண்டு வரட்டும் – பிரதமர் மோடி

Related News

தீபாவளி பண்டிகை ஒவ்வொரு வீட்டிலும் மகிழ்ச்சி, செழிப்பை கொண்டு வரட்டும் – பிரதமர் மோடி

புத்தக கொள்முதலில் ஊழல் செய்த திமுக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – அமைச்சர் ராஜ்மோகன்

அயோத்தியில் 10-வது தீபோற்சவம் கோலாகல தொடக்கம்!

2000 கோடி செலவில் வெற்றி மடிக்கணினி திட்டத்தை செயல்படுத்த முதல்வர் உத்தரவு!

தமிழகம் ஒப்புதலின்றி மேகதாது அணை கட்ட சட்டப்பூர்வ அனுமதி வழங்கக்கூடாது – பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!

மணல் குவாரி முறைகேடு – துரைமுருகன் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்ப லஞ்ச ஒழிப்புத்துறை திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க இடைக்கால தேர்தலில் உடைந்து நொறுங்கிய ட்ரம்ப்பின் பிம்பம் – சிறப்பு தொகுப்பு!

கோவை அறிவுலக போலி நூல்கள் விவகாரம் தொடர்பாக முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

தொடர்ந்து அதிகரிக்கும் இந்திய ரூபாயின் மதிப்பு : பங்கு சந்தையிலும் ஏற்றம் : காரணம் என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் குழு கலைப்பு – தமிழக அரசு அறிவிப்பு!

பல மணி நேரம் காத்திருந்த பயணிகள்;பேருந்துகள் இல்லாததால் அதிகாரிகளுடன் வாக்குவாதம்

தீபாவளி பண்டிகை;சிறப்பு பேருந்துகளில் 2.59 லட்சம் பேர் பயணம்

தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள்; நிரம்பி வழியும் பேருந்து நிலையம்

அறிவுலக நூலகத்திற்கு போலி நூல்கள்; சீமான் கண்டனம்

கோடிக்கணக்கில் முறைகேடு; எழுத்தாளர் குற்றச்சாட்டு

தலை தீபாவளியும், மண் மணம் மாறாத முறுக்கு, அதிரசமும் – ஸ்பெஷல் பலகாரங்கள் தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies