தேனியில், சாலையை மறித்து பட்டாசு வெடித்து ரீல்ஸ் எடுத்த இளைஞர்களைத் தட்டிக்கேட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில், மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பணி முடிந்து சாதாரண உடையில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில்குமார், சமதர்மபுரத்தில் சாலையை மறித்து பட்டாசு வெடித்து ரீல்ஸ் எடுத்த இளைஞர்களைத் தட்டிக்கேட்டுள்ளார். மேலும், அவர்களின் செயல்பாடுகளை கைபேசியில் பதிவு செய்ய முயன்றபோது, இளைஞர் ஒருவரைப் பிடிக்கச் சென்றுள்ளார்.
அப்போது அந்த இளைஞர் முழங்கையால் தாக்கியதில் செந்தில்குமார் நிலைதடுமாறி கீழே விழுந்ததாக தென்மண்டல ஐ.ஜி. தெரிவித்துள்ளார். காவல்துறையினர் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும், சிகிச்சை பலனின்றி செந்தில் குமார் உயிரிழந்தார்.
ஏற்கெனவே அவருக்கு இதயப் பிரச்னைகள் இருந்ததாகவும் ஐ.ஜி. விளக்கமளித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே, தேனியில் போதை நபர்களால் கொல்லப்பட்ட எஸ்எஸ்ஐ செந்தில்குமாரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், செந்தில்குமாரின் குடும்பத்திற்கு 40 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
















