தீபாவளி விடுமுறை முடிந்து பொதுமக்கள் சென்னை திரும்பியதால், செங்கல்பட்டு அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தீபாவளி பண்டிகையை கொண்டாட தென்மாவட்டங்கள் மற்றும் சொந்த ஊர்களுக்குச் சென்ற பொதுமக்கள், விடுமுறை முடிந்து சென்னை திரும்பினர். படாளம், புக்கத்துறை ஆகிய மேம்பாலங்கள் திறக்கப்பட்டதால் அங்கு போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் வாகனங்கள் இயக்கப்பட்டன.
எனினும், செங்கல்பட்டு அருகே பாலாறு பாலம் முதல் மாமண்டூர் வரை சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன. சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் போக்குவரத்து பாதிப்பின்றி வாகனங்கள் இயக்கப்பட்டன.
















